இந்தியாவில் பணக்காரர்களும், பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இந்த நிலையில் பணக்காரர்கள் தங்களது எதிர்காலத்திற்கான திட்டங்களை வேகமாகத் தீட்டி வருகின்றனர்.
ஒருபக்கம் புதிய பணக்காரர்கள் இந்தியக் குடியுரிமையை விடுத்து மேம்பட்ட வாழ்க்கை, வர்த்தக வாய்ப்புகளைத் தேடி வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளையில் இந்தியாவில் பெரும் சொத்து மதிப்பு, வர்த்தகங்களைக் கொண்டவர்கள் வெளிநாடுகளில் குடும்ப அலுவலகத்தைத் திறந்து வருகின்றனர்.
முகேஷ் அம்பானி
இதன் அடிப்படையில் முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் தனது குடும்ப அலுவலகத்தைத் திறந்த நிலையில் ஆசியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி தற்போது முகேஷ் அம்பானியை பாலோ செய்ய முடிவு செய்துள்ளார்.
கௌதம் அதானி
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு, வர்த்தகம் நாளுக்கு நாள் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தையும், சொத்துக்களையும் நிர்வாகம் செய்ய வெளிநாட்டில் குடும்ப அலுவலகத்தை அமைக்க முடிவு செய்துள்ளார் கௌதம் அதானி.
துபாய் அல்லது நியூயார்க்
துறைமுகத்தில் இருந்து மின்சாரம் வரையில் பல துறைகளில் வர்த்தகத்தை வைத்திருக்கும் அதானி குரூப் தலைவர் கௌதம் அதானி துபாய் அல்லது நியூயார்க்-ல் அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டு வருவதாகவும், இந்த அலுவலகம் தான் அதானி குடும்பத்தின் பர்சனல் நிதியை முதலீடு செய்யும் கட்டமைப்பில் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு மேனேஜர்கள்
இந்த அலுவலகத்திற்குச் சிறப்பு மேனேஜர்களை நியமிக்க வேண்டும் என்பதால் அதற்கான பணிகளும் நடந்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மட்டும் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்டும் சுமார் 58 பில்லியன் டாலர் அளவில் உயர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திலும் உள்ளார்.
எதிர்காலத் திட்டம்
இந்த நிலையில் கௌதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை வெளிநாட்டில் உருவாக்குவதன் மூலம் உலகளாவிய வர்த்தகத்தின் மீதான எதிர்காலத் திட்டத்தைக் காட்டுகிறது. சமீபத்தில் பல முன்னணி முதலீட்டாளர்கள், பணக்காரர்கள் தனது பர்சனல் சொத்துக்களை நிர்வாகம் செய்ய வெளிநாட்டில் குறிப்பாக வரி விதிப்புகள் குறைவாக இருக்கும் நாடுகளிலும், வர்த்தக வாய்ப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் குடும்ப அலுவலகத்தை உருவாக்கி வருகின்றனர்.
முக்கியப் பணக்காரர்கள்
உதாரணமாக ஹெட்ஜ பண்ட் பில்லியனரான ரே டாலியோ, கூகுள் துணை தலைவர் செர்கி பிரின், சமீபத்தில் முகேஷ் அம்பானி ஆகியோர் சிங்கப்பூரில் அலுவலகத்தைத் துவங்கினர். இதன் வழியில் தற்போது கௌதம் அதானி வருகிறார்.
வினோத் அதானி
கௌதம் அதானி மூத்த சகோதரர் வினோத் அதானி, துபாயில் தங்கியிருந்து, சிங்கப்பூர் மற்றும் ஜகார்த்தாவில் வர்த்தக வணிகங்களை நிர்வகித்து வருகிறார். சமீபத்திய ஹுருன் இந்தியா பணக்காரர் பட்டியலின்படி உலகின் மிகப் பெரிய பணக்காரர் அல்லாத இந்தியராக வினோத் அதானி இடம்பெற்றுள்ளார்.
அதானி குளோபல் இன்வெஸ்ட்மென்ட்
இது மட்டும் அல்லாமல் கௌதம் அதானி சகோதரர் வினோத் அதானி வணிக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் 2016 இல் நிறுவப்பட்ட அதானி குளோபல் இன்வெஸ்ட்மென்ட் டிஎம்சிசி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications