மும்பை: இந்தியாவில் அதானி குழுமம் எரிசக்தி ,துறைமுகங்கள் மேலாண்மை , விமான நிலையங்கள் மேலாண்மை , சிமெண்ட் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகி இயங்கி வருகிறது. அதானி குழுமம் அடுத்த கட்டமாக ரியல் எஸ்டேட் துறையில் கால் பதிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது .
கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் தற்போது திவால் நிலையில் இருக்கக்கூடிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களை கையகப்படுத்தி இருக்கிறது. Housing Development and Infrastructure (HDIL) நிறுவனம் மும்பையின் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாக இயங்கி வந்தது.

மும்பையின் பல்வேறு பகுதிகளில் இடங்களை வாங்கி வீடு கட்டி விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் நஷ்டத்துக்கு சென்றது.இதனை அடுத்து 2019ஆம் ஆண்டு இந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிறுவனம் மேற்கொண்டு வந்த ரியல் எஸ்டேட் திட்டங்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு எந்த நிறுவனங்கள் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஹெச்டிஐஎல் நிறுவனத்துக்கு சொந்தமான மும்பையின் பிரதான பகுதியில் இருந்த இரண்டு முக்கியமான சொத்துக்களை அதானி நிறுவனம் வாங்க இருக்கிறது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் அதானி குழுமத்தின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது . இன்ஸ்பயர் பிகேசி என்ற பெயரில் ஹெச்டிஐஎல் நிறுவனம் வைத்திருந்த வணிக ரீதியான சொத்தும், கல்யாண சகாத் பகுதியில் அமைந்திருக்கும் பல்வேறு நிலங்களும் இந்த நடைமுறையின் மூலம் அதானி வசம் செல்ல இருக்கிறது.

பிகேசி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய வணிக ரீதியிலான கட்டிடங்களுக்கு 3 கோடி ரூபாயையும் கல்யாண் சகாத் பகுதியில் அமைந்திருக்கும் நிலங்களுக்கு சுமார் 152 கோடி ரூபாயையும் அதானி குழுமம் செலுத்த இருக்கிறது. தற்போதைக்கு இந்த இரண்டு சொத்துக்களின் மதிப்பும் சுமார் 2000 கோடி வரை இருக்கும் என்று ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை ரியல் எஸ்டேட் சந்தை அதிக மதிப்பு கொண்டதாகவும் வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு சந்தையாகவும் இருக்கும் நிலையில் இங்கே இரண்டு முக்கியமான பகுதிகளில் இருக்கும் சொத்து அதானி வசம் சென்றுள்ளது. இதன் மூலம் மும்பையில் அதிகமான சொத்து வைத்திருக்கும் ஒரு நபராக அதானி மாறுகிறார். அதானி குழுமம் ரியல் எஸ்டேட் சந்தையில் வேகமாக இயங்க இருப்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
ஏற்கனவே அதானி நிறுவனம் தாராவி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இதனை மறுசீரமைப்பு திட்டத்தை மகாராஷ்ட்ரா மாநில அரசு கொண்டு வந்தது. அதற்கான டெண்டரை அதானி குழுமம் தான் கைபற்றியது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications