LIVE
HIGHLIGHTS
இந்தியாவில் முதலீட்டை குறைத்ததும் இல்லை.. நிறுத்தியதும் இல்லை.. கெளதம் அதானி அதிரடி!

இந்தியாவில் முதலீட்டை குறைத்ததும் இல்லை.. நிறுத்தியதும் இல்லை.. கெளதம் அதானி அதிரடி!

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக குழுமங்களில் ஒன்றான அதானி குழுமம், அசுர வளர்ச்சியினை கண்டு வருகின்றன. சர்வதேச அளவில் போட்டி போடும் அதானி குழுமம், கப்பல் முதல் எனர்ஜி வரையில் பற்பல வணிகங்களிலும் வெற்றிகரமாக கோலேச்சியுள்ளது.

கெளதம் அதானி இந்தியாவில் ஒருபோதும் முதலீடுகளை குறைத்ததில்லை. நிறுத்தவும் இல்லை. ஏனெனில் நிறுவனத்தின் வெற்றியானது அதன் வளர்ச்சி கட்டமைப்பினை அடிப்படையாக கொண்டது என அதன் வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்தில் 963% வளர்ச்சி.. மாஸ் காட்டும் பால்குனி நாயர்..! ஒரு வருடத்தில் 963% வளர்ச்சி.. மாஸ் காட்டும் பால்குனி நாயர்..!

ஏற்றுமதியாளர்

ஏற்றுமதியாளர்

இது குறித்து அதானி குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அதானி, புதிய எரிசக்தி வணிகத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட 70 பில்லியன் டாலர் முதலீடு என்பது, இந்தியாவை எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியாளரில் இருந்து, தூய்மையான எரிசக்தி ஏற்றுமதியளராக மாற்ற உதவும் என தெரிவித்துள்ளார்.

வெற்றி இந்தியாவுடன் இணைந்திருக்கும்

வெற்றி இந்தியாவுடன் இணைந்திருக்கும்

ஆக ஒருபோதும் நாங்கள் இந்தியாவில் இருந்து விலகியதும் இல்லை. முதலீட்டினை குறைத்ததும் இல்லை. முதலீட்டினை நிறுத்தவும் இல்லை. ஒரு போதும் நாங்கள் முதலீட்டினை குறைக்க மாட்டோம். எங்களின் அளவு பன்முகப்படுத்தப்பட்ட வணிகம், எங்களை சிறப்பாக செயல்பட நிலை நிறுத்துக்கின்றன என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமத்தின் வெற்றி, இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்திருப்பதை அடிப்படையாக கொண்டது என கூறியுள்ளார்.

பலதரப்பட்ட வணிகம்

பலதரப்பட்ட வணிகம்

1988ம் ஆண்டில் சரக்கு வணிகமாக தொடங்கப்பட்ட அதானி குழுமம், பல ஆண்டுகளாக துறைமுகங்காள், நிலக்கரி, எரிசக்தி, சப்ளை சங்கிலி, விமான நிலையங்கள், தரவு மையங்கள், சிமெண்ட், காப்பர் என பலதரப்பட்ட வணிகத்தினை மேற்கோண்டு வருகின்றது. தற்போது தனியார் நெட்வொர்க்கினை அமைக்க 5ஜி யினை ஏலம் எடுத்துள்ளது.

அதானியின் இலக்கு

அதானியின் இலக்கு

அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் இந்தியாவின் மிகப்பெரிய சோலார் பவர் டெவலப்பராகும், இது 2030ல் 45 ஜிகாவாட் மின் உற்பத்தியினை இலக்காக கொண்டுள்ளது. 2022 - 23ம் ஆண்டுகுள் ஆண்டுக்கு 2 ஜிகாவாட் சோலார் மின் உற்பத்தியினை உருவாக்க 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் என அறிவித்துள்ளார். 

எதிர்காலத்தின் தேவை அறிந்து அதற்கேற்ப அதானி குழுமம் முதலீட்டு திட்டங்களை அறிவித்து வருகின்றது.