கெளதம் அதானி தலைமையிலான ப்ரோமோட்டர் குழு, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட இரண்டு நிறுவனங்களில் பங்கு இருப்புகளை அதிகரித்துள்ளது.
துறைமுகங்கள் முதல் எனர்ஜி வரையில் பல துறையில் இயங்கி வரும் அதானி குழுமம் ஹிண்டன்பர்க், OCCRP அமைப்புகளின் அறிக்கையை தொடர்ந்து எதிர்கொண்ட மோசமான சந்தை மதிப்பீட்டு சரிவை எதிர்கொண்ட நிலையில், இதில் இருந்து மீண்டு வர பல முயற்சிகளை செய்து வருகிறது.

இந்த ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்த நிலையில், அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குழு நிறுவனங்கள் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு இருப்பை 69.87 சதவீதத்தில் இருந்து 71.93 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய வர்த்தகத்தை அடுத்தடுத்து உருவாக்கும் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் ப்ரோமோட்டர் குழு நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது முறையாக பங்குகளை உயர்த்தியுள்ளனர்.
அதானி குழும ப்ரோமோட்டர்கள் குழு கடந்த மாதம் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் பங்குகளை 67.65 சதவீதத்தில் இருந்து 69.87 சதவீதமாக உயர்த்தியுள்ளனர். தற்போது அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு இருப்பை 69.87 சதவீதத்தில் இருந்து 71.93 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இதேபோல் அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தில் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் குழு பங்குகளை 63.06 சதவீதத்தில் இருந்து 65.23 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவனத்தில் Resurgent Trade and Investment Ltd கிட்டத்தட்ட ஒரு சதவீத பங்குகளை திறந்த சந்தை பரிவர்த்தனைகளில் வாங்கியது, இதேபோல் எமர்ஜிங் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட் டிஎம்சிசி நிறுவனம் 1.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது, இந்த இரண்டு நிறுவனமே ப்ரோமோட்டர் குழு நிறுவனங்கள்.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தில் கெம்பாஸ் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் இன்ஃபினைட் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய 2 நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளது. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 8 வரை திறந்த சந்தை பரிவர்த்தனைகளில் இந்த பங்குகள் வாங்கப்பட்டதாக அதானி குழுமம் தனது அறிக்கையில் தாக்கல்கள் செய்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications