கௌதம் அதானி அமெரிக்காவில் உள்ள மிக விலையுயர்ந்த சட்ட நிறுவனங்களில் ஒன்றான Wachtell, Lipton, Rosen & Katz-ஐ ஹிண்டன்பர்க் எதிராக வழக்கில் வாதிட நியமித்துள்ளார் எனப் பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாட் செல்லரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை மூலம் அதானி குழுமம் சுமார் 110 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பை இழந்த நிலையில்.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என எதிர்த்து வழக்குத் தொடுக்க உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
இதேவேளையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட 2வது அறிக்கையில் அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளுக்கும் தயார் என அறிவித்துள்ளது.
WLRK எனச் சுருக்கமாக அழைக்கப்படும் Wachtell, Lipton, Rosen & Katz நிறுவனம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
மலையும், மலையும் மோதல்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் டிராக் ரெக்கார்ட் எந்த அளவுக்குச் சிறப்பாக உள்ளதோ அதே அளவுக்கு WLRK-ன் டிராக் ரெக்கார்டும் சிறப்பாக உள்ளது. இந்த நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொள்வது மூலம் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ்
பைனான்சியல் டைம்ஸ் தகவல் படி WLRK நிறுவனத்தை அதானி குழுமத்தின் வழக்கறிஞர்கள் நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தின் மூலம் அணுகியுள்ளார் கௌதம் அதானி.
கரண் அதானி
மும்பையில் இயங்கி வரும் சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் சிரில் ஷ்ராஃப்-ன் மகள்
பரிதி (Paridhi), கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி-யின் மனைவியாவர்.
WLRK நிறுவனம்
இந்த நிலையில் Wachtell, Lipton, Rosen & Katz பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியவை அதிகளவில் உள்ளது. இதில் முதலும் முக்கியமான விஷயம் அமெரிக்க வால் ஸ்ட்ரீட்டின் மிகவும் கடுமையான சட்ட நிறுவனம் என்ற பெருமைக்கு உரியது. அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கியமான நிறுவன வழக்குகளில் WLRK உள்ளது என்றால் மிகையில்லை.
நியூயார்க்
1965 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர்களின் ஒரு சிறிய குழுவால் நிறுவப்பட்டது தான் இந்த WLRK. ஹெர்ப் வாச்டெல், மார்ட்டின் லிப்டன், லியோனார்ட் ரோசன் மற்றும் ஜார்ஜ் காட்ஸ் ஆகியோர் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் இந்த WLRK.
கார்ப்பரேட் நிர்வாக வழக்குகள்
நிறுவனர்களின் பெயரில் உருவானது தான் இந்த Wachtell, Lipton, Rosen & Katz நிறுவனம். இந்த நிறுவனம் சிக்கலான கார்ப்பரேட் நிர்வாக வழக்குகளை எடுத்து வாதிட்டு வெற்றி பெறுவதில் மிகப்பெரிய மதிப்பையும் டிராக் ரெக்கார்ட்-ஐயும் வைத்துள்ளது.
முக்கியச் சிறப்பு
WLRK சட்ட நிறுவனம் M&A, மூலோபாய முதலீடுகள், டேக்ஓவர் மற்றும் டேக்ஓவர் டிபென்ஸ், பங்குதாரர் செயல்பாடு, கார்ப்பரேட் மற்றும் செக்யூரிட்டீஸ் சட்டம் மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளதாகக் கூறுகிறது.
டிவிட்டர் - எலான் மஸ்க் வழக்கு
WLRK நிறுவனத்தில் 500 - 1000 ஊழியர்கள் உள்ளனர், சமீபத்தில் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான டிவிட்டர் - எலான் மஸ்க் வழக்கை டிவிட்டர் தரப்பில் இருந்து வாதிட்டு, எலான் மஸ்க் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பதிவு செய்து டிவிட்டரை கைப்பற்றும் நிலைக்குத் தள்ளியது WLRK நிறுவனம்.
சோலார் சிட்டி நிறுவனம்
இதே WLRK நிறுவனம் எலான் மஸ்க் தரப்பில் இருந்து டெஸ்லா பங்குதாரர்கள் சோலார் சிட்டி நிறுவனத்தை 2.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றிய வழக்கில் வாதிட்டனர். ஆனால் நீதிமன்ற ஆவணங்கள் படி மஸ்க்கின் வாட்ச்டெல் வழக்கறிஞர்கள் 2019 இல் வழக்கை விட்டு வெளியேறினர். இதேபோல் 2018ல் டெஸ்லா தனியார் நிறுவனமான மாற்ற இதே WLRK நிறுவனம் ஆலோசனை வழங்கியது.
20 வருடம்
1965 ஆம் ஆண்டு முதல் WLRK நிறுவனம் இயங்கி வந்தாலும், கடந்த 20 வருடத்தில் மிகப்பெரிய வளர்ச்சி, வெற்றிகளைப் பதிவு செய்து அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் காஸ்ட்லவியான சட்ட நிறுவனங்களில் ஒன்றாக Wachtell, Lipton, Rosen & Katz மாறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications