சென்னை: இந்தியாவில் அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் வேளையில் இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி-க்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.
அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்திற்கு உலக அளவில் தனது வியாபாரத்தை விரிவுபடுத்துவதில் முக்கியமான வளர்ச்சியை இன்று கண்டுள்ளது. அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி இன்டர்நேஷனல் போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ் மூலம் 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தை வென்றுள்ளது, அதுவும் வெளிநாட்டு துறைமுகத்தை இயக்க மிகப்பெரிய வாய்ப்பை பெற்றுள்ளது.

அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனம் ஏற்கனவே இந்தியத் துறைமுகங்களை கட்டியாண்டு வரும் வேளையில், கடந்த சில வருடங்களில் இஸ்ரேல் நாட்டில் ஹனிபா துறைமுகம், இலங்கை துறைமுகம் என பல வெளிநாட்டு துறைமுகங்களை இயக்கும் உரிமையைப் பெற்றது. இதன் நீட்சியாக தற்போது டான்சானியா துறைமுகத்தை இயக்க 30 ஆண்டுக்கால ஒப்பந்தத்தை வென்றுள்ளது கௌதம் அதானி தலைமையிலான அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனம்.
டான்சானியா-வின் Dar es Salaam துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையம் 2 (CT2) அதாவது கண்டைனர் டெர்மினல்-ஐ இயக்கவும், நிர்வாகம் செய்யவும் 30 ஆண்டுக் காலத்திற்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
டான்சானியா துறைமுக நிர்வாகம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்தானது மூலம் அதானி போட்ர்ஸ் அதிகாரப்பூர்வமாக டான்சானியாவில் நுழைந்துள்ளது. இதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் மிகப்பெரிய துறைமுக ஆப்ரேட்டராக அதானி போர்ட்ஸ் உயர வேண்டும் என்ற முக்கிய இலக்கையும் அடைய உள்ளது.
டான்சானியாவின் நுழைவு வாயில் துறைமுகத்தில் இயக்கம்: Dar es Salaam துறைமுகம் கிழக்கு ஆபிரிக்காவின் முக்கிய நுழைவு வாயிலாக உள்ளது, இது சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகளுடன் சிறப்பான முறையில் இணைக்கப்பட்ட நெட்வொர்க் கொண்டு உள்ளது.
டான்சானியாவின் Dar es Salaam துறைமுகத்தில் கண்டைனர் டெர்மினல் 2 நான்கு தளங்களைக் கொண்டது, இதில் ஆண்டுக்கு 1 மில்லியன் இருபது அடி சமமான அலகுகளுக்கு (TEUs) இணையான சரக்குகளை கையாளும் திறனைக் கொண்டுள்ளது.
இந்த துறைமுகத்தை அதானி குழுமம் தனி ஆளாகக் கையாளவில்லை, அதானி இன்டர்நேஷனல் போர்ட்ஸ் ஹோல்டிங்க்ஸ், AD Ports Group மற்றும் East Harbour Terminals Ltd (EHTL) ஆகியவை இணைந்து டான்சானியா துறைமுக ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த 3 நிறுவனங்கள் அடங்கிய கூட்டணி "East Africa Gateway Ltd (EAGL)" என்ற தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
East Africa Gateway Ltd (EAGL) நிறுவனத்தின் அதானி போர்ட்ஸ் & SEZ ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கான பங்குகளைக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications