1962-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் பிறந்த கவுதம் அதானி, எளிமையான தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களில் ஒருவராக மாறியுள்ளார். தற்போது, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் அறிக்கையின் படி, கவுதம் அதானி $93.5 பில்லியன் நிகர மதிப்புடன், இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரராக இருக்கிறார். அதானி 1988-ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைசஸ் என்று அழைக்கப்படும் அதானி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நிறுவினார். இது எரிசக்தி, விவசாயம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய நிறுவனமாக மாறியுள்ளது.
ஆரம்பகால வாழ்க்கை: கவுதம் அதானி ஆரம்பத்தில் அவரது தந்தையுடன் சேர்ந்து ஜவுளி வியாபாரியாக பணிபுரிந்தார். அவரது தாயார் வீட்டை நிர்வகித்தார். குஜராத் பல்கலைக்கழகத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சியில் கவுதம் அதானி இறங்கினார். அதானி என்டர்பிரைசஸ்-இன் தொடக்கம் அவருடைய இந்திய வணிகத்தில் குறிப்பிடத்தக்க ஏற்றத்திற்கு வழி வகுத்தது.

1998-ஆம் ஆண்டு நடந்த கடத்தல் சம்பவம்: கவுதம் அதானியின் வாழ்க்கையில் 1998-ஆம் ஆண்டில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. கவுதம் அதானி தனது தோழர் சந்திலால் படேலுடன் சேர்ந்து அகமதாபாத்தில் ஆயுதக் கொள்ளையர்களால் கடத்தப்பட்டார்.
கவுதம் அதானி மற்றும் அவருடைய நண்பர் இருவரும் கர்ணாவதி கிளப்பை விட்டு வெளியேறிய போது அவர்களுக்கு பின்னால் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ஃபஸ்ல்-உர்-ரஹ்மான் மற்றும் போகிலால் தர்ஜி ஆகியோர் ஸ்கூட்டர்களை ஓட்டிச் சென்று, அவர்களை நிறுத்தும்படி வற்புறுத்தி, பின்னர் கடத்திச் சென்றனர்.
கடத்தல்காரர்கள் இந்த இருவரையும் விடுவிக்க $1.5 முதல் $2 மில்லியன் வரை பணம் கேட்டனர். இது இந்திய மதிப்புக்கு ரூ.15 கோடி. ஆனால் அதிர்ஷ்டவசமாக, கவுதம் அதானியும் படேலும் அதே நாளில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் கவுதம் அதானி, “என் வாழ்க்கையில் 3 மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடந்தன. அதில் இதுவும் ஒன்று என்று கூறியிருப்பார்.
1998-ஆம் ஆண்டில் நடந்த கடத்தல் சம்பவத்திற்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கூடுதல் மாவட்ட நீதிபதி அதானி தரப்பில் சமர்ப்பித்த வழக்கிற்கு போதிய சான்றுகள் இல்லாததைக் காரணம் காட்டி, குற்றவாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அறிக்கையின்படி, ரஹ்மான் மற்றும் தர்ஜியின் வழக்கறிஞர் குணால் என் ஷா கூறுகையில், முக்கிய சாட்சிகள் இல்லாததால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த கடத்தல் வழங்கிற்காக அதானிக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. அதைத் தவிர, விசாரணை அதிகாரிகள் உட்பட சாட்சிகள், என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறவில்லை. இதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஃபஸ்ல்-உர்-ரஹ்மான் பீகாரைச் சேர்ந்தவர். குஜராத்தில் மிரட்டி பணம் பறிப்பவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். 1990-கள் மற்றும் 2000-களின் முற்பகுதியில் குஜராத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். ரஹ்மான் மற்ற குற்ற வழக்குகளில் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், தர்ஜி ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.
மும்பை தீவிரவாத தாக்குதல்களில் உயிர் பிழைத்வர்: கவுதம் அதானியின் மரணத்துடனான மோதல்கள் அதோடு நிற்கவில்லை. 2008 நவம்பர் 26 அன்று, அவர் ஐகானிக் தாஜ் மஹால் ஹோட்டலில் மும்பை தீவிரவாத தாக்குதலின் போது அதானியும் சிக்கிக் கொண்டார். துபாய் போர்ட் சிஇஓ முகமது ஷரஃப் உடனானச் சந்திப்புக்குப் பிறகு, தாக்குதல் தொடங்கியது.
அங்கு வந்து விருந்தினர்கள் விரைவாக பாதுகாப்புக்காக ஹோட்டல் சமையலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதாள அறைக்கு மாற்றப்பட்டனர். அதானி அடுத்த நாள் காலை மீட்கப்படுவதற்கு முன்பு பாதாள அறையில் இரவு முழுவதும் இருந்தார். அகமதாபாத் திரும்பிய பின்னர், அவர் இந்த அனுபவத்தை விரிவாக விவரித்தார், "நான் வெறும் 15 அடி தொலைவில் மரணத்தைப் பார்த்தேன்" என்று கூறியிருந்தார். இவ்வளவு சவால்களை கடந்து தற்போது உலகின் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவுதம் அதானி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications