இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குரூப், ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹைடெல்பெர்க் மெட்டீரியல்ஸ்-ன் (Heidelberg Materials) இந்திய சிமெண்ட் பிரிவை கையகப்படுத்தப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சிமெண்ட் உற்பத்தியிலும், விற்பனையிலும் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இயங்கி வரும் அதானி குழுமம் அடுத்தடுத்து இத்துறையில் இருக்கும் நிறுவனங்களை வாங்கி வருகிறது.
ஏற்கனவே இந்திய சிமெண்ட் துறையில் பல சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களின் கைப்பற்றல் காரணமாக மாயமாகும் நிலையில், கௌதம் அதானியின் புதிய கைப்பற்றல் திட்டம் சிமெண்ட் தொழிற்துறை கூடுதலாக ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

அதானி குரூப்பின் துணை நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ், சுமார் 1.2 பில்லியன் டாலர் முதலீடு செய்து Heidelberg Materials-ன் இந்திய பிரிவை கைபற்றுவதற்காக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் இந்தியாவில் பல சிமெண்ட் நிறுவனங்களை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி சிலவற்றைக் கைப்பற்றியிருந்தாலும், பல முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது.
இதன் படி Heidelberg Materials இந்திய சிமெண்ட் பிரிவை கைப்பற்றும் முயற்சியைப் பார்க்கும் போது கட்டாயம் வெற்றி அடைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கு முக்கியமான காரணம் அதானி கொடுக்கும் தொகையின் அளவு தான்.
உலகளாவிய சிமெண்ட் உற்பத்தியாளரான ஹைடெல்பெர்க் மெட்டீரியல்ஸ், இந்தியாவில் பட்டியலிடப்பட்ட ஹைடெல்பெர்க் சிமெண்ட் இந்தியா மற்றும் பட்டியலிடப்படாத ஜுவரி சிமெண்ட் மூலம் செயல்படுகிறது. இந்த ஜெர்மன் நிறுவனம் இந்தியாவில் சுமார் 14 மில்லியன் டன் உற்பத்தித் திறனைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், உண்மையான உற்பத்தித் திறன் குறைவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
உலகில் 50 நாடுகளில் வர்த்தகமாகி வரும் Heidelberg Materials, இந்திய பிரிவில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் சுமார் 4,957 கோடி ரூபாய் சந்தை மதிப்புடன் இயங்கி வருகிறது. இதில் சுமார் 69,39 சதவீத பங்குகளை ஹைடெல்பெர்க் மெட்டீரியல்ஸ்-ன் ப்ரோமோட்டர்கள் வைத்துள்ளனர்.
ஆனால் கௌதம் அதானி ஹைடெல்பெர்க்சிமெண்ட் இந்தியா மற்றும் பட்டியலிடப்படாத ஜுவரி சிமெண்ட் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து சுமார் 1.2 பில்லியன் டாலர் அதாவது 10000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க தயாராகியுள்ளது. ஜூன் 30,2024 தேதியின் நிலவரத்தின் படி அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திடம் சுமார் 18,299 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஆதாரம் உள்ளது.
அதானி குரூப் மற்றும் ஹைடெல்பெர்க் மெட்டீரியல்ஸ் இடையேயான பேச்சுவார்த்தைகளை ஜெர்மன் நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து ஒரு மூத்த நிர்வாகி நடத்தி வருகின்றனர். உற்பத்தி திறன், மதிப்பீடு மற்றும் இணைந்து பணியாற்றும் முறை என பல்வேறு அம்சங்களை இரண்டு தரப்பும் விவாதிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால், இந்த கையகப்படுத்தல் அதானி குரூப்பிற்கு தனது சிமெண்ட் வணிகத்தை விரிவுபடுத்தவும் இந்திய சந்தையில் தனது நிலையை ஒருங்கிணைக்கவும் முக்கிய மைல்கல்லாக இருக்கும். இருப்பினும், பேச்சுவார்த்தைகளின் இறுதி முடிவு தான் அனைத்திற்குமான பதிலாக இருக்கும், மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை இதுவரையில் அதானி குழுமம் வெளியிடவில்லை.
இந்திய சிமெண்ட் துறையில் அதானி குழுமத்தைப் போலவே, இத்துறையில் பெரும் ஆதிக்கம் கொண்டிருக்கும் அல்ட்ராடெக் சிமெண்ட் தனது நிலையை வலுப்படுத்தும் பொருட்டு சிறிய சிமெண்ட் நிறுவனங்களைத் தீவிரமாகக் கையகப்படுத்தி வருகிறது.
2022 ஆம் ஆண்டு வரையில் சிமெண்ட் துறையில் எவ்விதமான வர்த்தகமும் இல்லாத அதானி குழுமம் ஹோல்சிம் இந்திய வர்த்தகத்தை மொத்தமாகக் கையகப்படுத்தியதன் மூலம் சிமெண்ட் வணிகத்தில் நுழைந்த அதானி குரூப் இன்று மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications