இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் நிலையில் சமீபத்தில் முகேஷ் அம்பானிக்குப் போட்டியாக மீடியா துறையில் இறங்க முடிவு செய்து இதற்காக இப்பிரிவில் புதிதாக ஒரு நிறுவனத்தையும் துவங்கியது அதானி எண்டர்பிரைசர்ஸ்.
இந்நிலையில் அதானி குழுமம் மீடியா துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக வழக்கம் போல் இத்துறையில் இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்ற முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
கௌதம் அதானி - முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி எப்படித் தனது வர்த்தகத்தை டெலிகாம், ரீடைல், டெக்னாலஜி, மீடியா எனப் பல துறையில் வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறாரோ, அதேபோல் கௌதம் அதானி தனது வர்த்தகத்தைப் புதிதாக ஏர்போர்ட், டேட்டா சென்டர் மற்றும் இதர பிரிவுகளில் விரிவாக்கம் செய்து வருகிறார்.
மீடியா துறை
இந்நிலையில் தற்போது புதிதாக மீடியா துறைக்குள் முகேஷ் அம்பானி உடன் நேரடியாகப் போட்டிப்போடும் வகையில் களத்தில் இறக்கியுள்ளார். இதன் மூலம் கூடிய விரைவில் இந்தியாவின் இரு பெரும் பணக்காரர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவாக உள்ளது.
அதானி குரூப்
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் அடிப்படையில் அதானி குரூப் தற்போது உள்ளூர் டிவி, செய்தித்தாள் நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளதாகவும், இன்னும் சில நிறுவனங்களைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பக்கட்ட ஆலோசனை செய்து வருவதாகத் தெரிகிறது.
AMG மீடியா நெட்வொர்க்ஸ்
அதானி குழுமம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் மீடியா துறையில் இறங்குவதற்காக AMG மீடியா நெட்வொர்க்ஸ் என்னும் புதிய நிறுவனத்தைத் துவங்கு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாயிலாகப் பிப்ளிஷிங், விளம்பரம், பிராட்காஸ்டிங், கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் போன்ற பிரிவில் தீவிரமாக இறங்க உள்ளதாக அறிவித்தது அதானி குழுமம்.
ப்ளூம்பெர்க் பங்குகள்
இதேபோல் அதானி மீடியோ வென்சர்ஸ் நிறுவனம் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் இந்திய கூட்டணி நிறுவனமான Quintillion Business Media நிறுவனத்தில் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்ற உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மீடியா துறையில் அதிகாரப்பூர்வமாகக் கௌதம் அதானி தனது ஷாப்பிங்-ஐ துவங்கியுள்ளார். ஆரம்பிக்கலாங்களா...
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications