2024 ஆம் ஆண்டில் அதிக சொத்து சேர்த்த இந்திய பணக்காரர் என்று பெருமை கௌதம் அதானிக்கு கிடைத்திருக்கிறது. ஹரன் உலக பணக்கார பட்டியல் 2025 வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த கௌதம் அதானி கடந்த ஓராண்டு காலத்தில் தன்னுடைய சொத்து மதிப்பில் கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாயை சேர்த்து இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 13 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு அடுத்த இடத்தில் அதாவது இரண்டாவது இடத்தை கௌதம் அதானி பிடித்திருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8.6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 8.4 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.

கடந்த ஓர் ஆண்டு காலத்தில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 13 சதவீதம் சரிந்து இருக்கிறது கௌதம் அதானியின் சொத்து மதிப்பில் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கௌதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் துறைமுகம், மின்சார உற்பத்தி, விமான நிலைய மேலாண்மை, சுரங்கத் துறை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை , ஊடகம் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானிக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை ரோஷினி நாடார் பிடித்து இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 3.5 லட்சம் கோடிகளாக இருக்கிறது. இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் மற்றும் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்த பெண் என்ற பெருமை ரோஷினி நாடாருக்கு கிடைத்திருக்கிறது.
அதேபோல திலீப் சாங்வி 2.5 லட்சம் கோடி ரூபாயுடன் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். கடந்த ஓராண்டு காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு 21 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. திலீப் சாங்வி சன் ஃபார்மா நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
அடுத்ததாக விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 2.2 லட்சம் கோடி ரூபாயுடன் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். குமாரமங்கலம் பிர்லா, சைரஸ் பூனவல்லா, பஜாஜ் , ராதாகிருஷ்ணன் தமானி உள்ளிட்டவர்கள் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய பணக்காரர்களில் ஐந்து பேர் மும்பையில் வசிக்கின்றனர், இரண்டு பேர் டெல்லியிலும், பெங்களூரு ,அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் வசிப்பது தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் தற்போது 284 பில்லினியர்கள் இருப்பதாக இந்த பட்டியல் குறிப்பிடுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த பட்டியலில் 13 பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications