இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் 3வது பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி 2022 ஆம் ஆண்டில் மட்டும் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பை சேர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் குறியாய் இருக்கிறார் கௌதம் அதானி.
அந்த வகையில் நவம்பர் மாதம் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி போர்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் இந்தியந் ஆயில்டேக்கிங் என்னும் நிறுவனத்தின் 49.3 சதவீத பங்குகளைச் சுமார் 1,050 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றினார்.
இதைத் தான் தற்போது அனைவரும் தங்க முட்டை எனக் கூறி வருகின்றனர். ஏன் தெரியுமா..?
அதானி குழுமம்
அதானி குழுமம் பல துறையில் இயங்கி வருவது போலச் சேமிப்பு மற்றும் போக்குவரத்துத் துறையில் இயங்கும் நிறுவனம் தான் இந்த அதானி போர்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் தற்போது இந்தியன் ஆயில்டேங்கிங் நிறுவனத்தில் 49.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் தற்போது கச்சா எண்ணெய் துறையில் இறங்கியது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
தனியார் நிறுவனம்
இந்தியாவில் சில நிறுவனங்கள் மட்டுமே இப்பிரிவில் இருக்கும் நிலையில் அதானி குழுமத்தின் வருகை பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும்.
இந்தியன் ஆயில் டேங்கிங்
இந்தியன் ஆயில் டேங்கிங் என்னும் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் மற்றும் ஜெர்மனி நாட்டின் ஆயில்டேங்கிங் GMBH இணைந்து 1996ல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டணி மூலம் இந்தியாவில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் பொருட்களுக்காக ஸ்டோரேஜ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் வழங்கப்பட்டு வந்தது.
1050 கோடி ரூபாய்
இந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனம் ஜெர்மனி நாட்டின் ஆயில்டேங்கிங் வைத்திருந்த 49.3 சதவீத பங்குகளைச் சுமார் 1050 கோடி ரூபாய்க்கு வாங்கியது மூலம் இந்நிறுவனத்திற்குக் கச்சா எண்ணெய் சந்தையில் downstream oil வர்த்தகத்தில் பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதானி போர்ட்ஸ்
இதுநாள் வரையில் இப்பிரிவு வர்த்தகம் மத்திய அரசு நிறுவனங்களின் கையில் இருந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனமான அதானி போர்ட்ஸ் நுழைந்துள்ளது.
downstream oil சந்தை
ஆயில் டேங்கிங் பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் downstream oil சந்தையில் இருக்கும் அனைத்து வர்த்தகம், தரவுகளை அதானி போர்ட்ஸ் பெற முடியும், இதேபோல் downstream oil வர்த்தகம் என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை சுத்திகரிப்புச் செய்து அதை மார்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிபியூஷன் செய்வது தான்.
20 வருடம்
இந்தியாவில் அடுத்த 20 வருடத்திற்குக் கச்சா எண்ணெய், பெட்ரோலியம், ஆயில், லூப்ரிகன்ட் ஆகியவற்றின் தேவை அதிகமாகவே இருக்கும், இதனால் அதானி குழுமத்திற்கு மிகப்பெரிய வர்த்தகம் கையில் கிடைத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்றுமதி, இறக்குமதி
இந்தக் கூட்டணி மூலம் அதானி போர்ட்ஸ் நேரடியாகப் பெட்ரோலியம், ஆயில், லூப்ரிகன்ட் ஆகியவற்றை ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யும் முடியும். மேலும் அதானியின் ஆயில் ஸ்டோரேஜ் அளவு 200 சதவீதம் அதிகரித்து 3.6 மில்லியன் கிலோ லிட்டர் ஆக உயர்ந்துள்ளது எனக் கரன் அதானி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications