இந்திய வர்த்தக சந்தையில் யாரும் அசைக்க முடியாத அளவுக்கு ராக்கெட் வேகத்தில் வளர்ந்துக்கொண்டு இருந்த அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இதிலிருந்து மீண்டு வர தீவிரமாக முயற்சி செய்கிறார். இந்த முக்கியமான காலக்கட்டத்தில் இன்று கௌதம் அதானி-க்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கூட ஹிண்டன்பர்க் ரிச்ர்ச் குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் சில அரசு அமைப்புகள் துவங்கியுள்ள விசாரணையின் மூலம் அதானி பங்குகள் வெள்ளிக்கிழமை பெரிய அளவில் சரிந்துள்ளது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பீடு 54,686 கோடி ரூபாய் அளவிலான இழப்பை எதிர்கொண்டு 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை இழந்து 9,73,200 கோடி ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.

கௌதம் அதானியின் பிறந்த நாளில் அவருடைய பிரம்மாண்ட வீடு மற்றும் காஸ்ட்லியான சொத்துக்களை இப்போது பார்ப்போம். கௌதம் அதானி டெல்லி லுடியன்ஸ் பகுதியில் 250000 சதுரடியில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர வீட்டை வைத்துள்ளார். அதைத் தொடர்ந்து அகமதாபாத்-ல் 3.4 ஏக்கரில் பெரிய வீட்டை வைத்துள்ளார், அதானி குடும்பமும் அதிகப்படியான நேரம் இந்த வீட்டில் தான் செலவு செய்கின்றனர்.
கௌதம் அதானி-யிடம் BMW 7 சீரியஸ், ரோல்ஸ் ராய்ஸ், பெராரி ஆகிய கார்களை வைத்துள்ளார். ஆனால் பிற இந்திய கோடீஸ்வரர்களை விடக் கௌதம் அதானி அதிக எண்ணிக்கையிலான பிரைவேட் ஜெட் வைத்துள்ளார்.
கௌதம் அதானி-யிடம் ஒரு பாம்பார்டியர், ஒரு பீச்கிராஃப்ட் மற்றும் ஒரு ஹாக்கர் உட்பட 3 பிரைவேட் ஜெட் விமானங்கள் வைத்துள்ளார். இவை 8, 37 மற்றும் 50 இருக்கைகள் கொண்ட விமானங்களை வைத்துள்ளார். இதுபோக 2011 ஆம் ஆண்டில் கௌதம் அதானி மிகவும் விரும்பி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் AW139, இரட்டை எஞ்சின் கூடிய 15 இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டரை ரூ.12 கோடி விலையில் வாங்கினார்.


Click it and Unblock the Notifications