அதானி வீடு தேடி வரும் லட்சுமி.. சிகே பிர்லா-வின் நிறுவனத்தை கைப்பற்ற போகும் கௌதம் அதானி..!!

இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் சிமெண்ட் உற்பத்தி துறை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இதற்கு ஏற்றார் போல் சிமெண்ட் துறையில் அதானி குழுமம் இறங்கியது முதல் பெரும் போட்டிகள் நிலவி வருகிறது, இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் பல சிறு நிறுவனங்கள் தடுமாற துவங்கியுள்ளது.

இந்த நிலையில் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை அதன் உரிமையாளர் சிகே பிர்லா விற்பனை செய்ய கடந்த சில மாதங்களாக முயற்சி செய்து வரும் நிலையில் இருவருடைய நிறுவன மதிப்பீட்டை யாரும் ஏற்காத நிலையில் கடைசி ஆஃப்ஷனாக இருந்த கௌதம் அதானியிடம் வந்துள்ளார்.

அதானி வீடு தேடி வரும் லட்சுமி.. சிகே பிர்லா-வின் நிறுவனத்தை கைப்பற்ற போகும் கௌதம் அதானி..!!

இந்திய சிமெண்ட் துறையில் கடந்த 1.5 வருடத்தில் அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சங்கி சிமெண்ட் ஆகியவற்றை வாங்கியுள்ளார். இதன் மூலம் சிமெண்ட் உற்பத்தி துறையில் 2வது பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது மட்டும் அல்லாமல் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து முதலீடு செய்யவும் திட்டமிட்டு உள்ளது அதானி குழுமம்.

இந்த நிலையில் 4வது நிறுவனமாக சிகே பிர்லா -வின் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்க கௌதம் அதானி பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளார். இதற்காக இரு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருடத்தின் துவக்கத்தில் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்குவதற்கு சிறந்த நபரை தேடும் பணியில் ஜேபி மோர்கன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் பிர்லா குடும்பம் மற்றும் தனியார் முதலீட்டு அமைப்புகள் மூலம் சுமார் 37.9 சதவீத பங்குகளை சிகே பிர்லா வைத்துள்ளார்.

ஓரியென்ட் சிமெண்ட் நிறுவன பங்கு விற்பனையின் அறிவிப்பு காரணமாக கடந்த 3 மாதத்தில் இந்நிறுவன பங்குகள் சுமார் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது சிகே பிர்லா வைத்திருக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு 3,878 கோடி ரூபாயாகும். மேலும் இந்த பங்குகள் விற்பனை செய்யப்படட்டால் கூடுதலாக 26 சதவீத பங்குகளை புதிய ப்ரோமோட்டர் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இதன் மூலம் ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தில் 64 சதவீத பங்குகளை வாங்கி ஆதிக்கம் செலுக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்தும், பங்க விற்பனை குறித்து தனது எதுவும் தெரியாது என ஓரியென்ட் சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் கேத்தரபால் ஈடி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார். மேலும் அதானி குழுமமும் எவ்விதமான அறிவிப்பையும் இது தொடப்பாக அறிவிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+