சென்னை: செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் தமிழ்நாட்டு நிறுவனமும், தமிழர் தலைமை வகிக்கும் நிறுவனமும் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் மத்திய அரசின் மாபெரும் PLI திட்டத்தின் கீழ் பலனடைய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் அதானி குழுமம் களத்தில் இறங்கியுள்ளது.
டெக் தயாரிப்புகளிலும், தொழில்நுட்ப பிரிவிலும் பெரிய அளவில் அனுபவம் இல்லாத அதானி குழுமம் இந்தியாவில் செமிகண்டக்டர் தயாரிப்பில் இறங்கும் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாக தெரிகிறது.

செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற தொழில்நுட்பங்கள் துறைகளில் அமெரிக்க சிப் தயாரிப்பு ஜாம்பவானான குவால்காம் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மார்ச் 11 ஆம் தேதி டிவிட்டரில் குவால்காம் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ ஆர் அமோன் அவர்களை சந்தித்தது குறித்த பதிவை பகிர்ந்து கொண்டார். இந்த ஒரு பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
செமிகண்டக்டர் சிப் மற்றும் வயர்லெஸ் தகவல் தொடர்பு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பன்னாட்டு நிறுவனம் குவால்காம்.
டிவிட்டர் பதிவில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு, மொபைல் தொழில்நுட்பம் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் (Edge Computing) போன்ற துறைகளுக்கான குவால்காமின் தொலைநோக்கு திட்டங்களை கௌதம் அதானி பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் செமிகண்டக்டர் துறை இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தாலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் டிமாண்ட் மற்றும் மத்திய அரசின் திட்டத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன.
2023 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்க சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் நிறுவனம், குஜராத்தில் உள்ள சானந் பகுதியில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையைக் கட்டமைத்து வருகிறது. இது இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கு ஒரு மைல் கல் ஆகும்.
சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த முருகப்பா குரூப்-ன் கட்டப்பாட்டில் இருக்கும் CG Power and Industrial Solutions, தாய்லாந்து Renesas Electronics உடன் இணைந்து இந்தியாவில் osat தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதேபோல் தைவான் PSMC உடன் கூட்டணி சேர்ந்து குஜராத்தில் 91000 கோடி ரூபாயில் புதிய சிப் ஃபேப்ரிகேஷன் மற்றும் பேகேஜ் யூனிட் தளத்தை அமைக்க உள்ளது, இத்திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் 4வதாக அதானி - குவால்காம் வருப்போகிறா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது, இதேவேளையில் பாகஸ்கான் - ஹெச்சிஎல் கூட்டணியும் இதேபோன்ற முயற்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications