BioGas துறையில் இறங்கும் அம்பானி, அதானி.. 1200 கோடி முதலீடு..!

இந்தியாவில் அடுத்தடுத்து பல துறையில் இறங்கி வரும் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி சமீபமாக இருவரும் ஓரே துறையில் போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது.

இது இருவருக்குமான போட்டி என்பதைத் தாண்டி பல சிறு, குறு நிறுவனங்கள் இவ்விரு பணக்காரர்களின் வருகையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

இப்படி இருக்கையில் தற்போது முகேஷ் அம்பானி, அனில் அம்பானி தற்போது இவருவதும் பயோகேஸ் தயாரிப்புத் துறையில் இறங்குகின்றனர், இந்தப் பிரிவில் யார் அதிக வருமானத்தையும் லாபத்தையும் பார்க்கப்போவது என்பதில் பெரிய போட்டி இருக்கப்போகிறது.

கௌதம் அதானி, முகேஷ் அம்பானி

கௌதம் அதானி, முகேஷ் அம்பானி

கௌதம் அதானி-யின் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை தலா இரண்டு புதிய கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas - CBG) தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

40 மில்லியன் டன் பயோகேஸ்

40 மில்லியன் டன் பயோகேஸ்

இதில் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் வருஷத்திற்கு 40 மில்லியன் டன் பயோகேஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலத்தில் அமைக்கத் திட்டமிட்டு உள்ளது. இதே அளவில் இரு பயோகேஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமைக்க உள்ளது.

600 கோடி ரூபாய்

600 கோடி ரூபாய்

இந்தத் தொழிற்சாலைகளை அமைக்க அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலா 600 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் எரிவாயு துறையில் இரு பெரிய பணக்காரர்களும் ஓரே நேரத்தில் நுழைய உள்ளதால் இவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

பயோகேஸ் உற்பத்தி

பயோகேஸ் உற்பத்தி

கம்பிரஸ்டு பயோகேஸ் (compressed biogas - CBG) என்பது விவசாயக் கழிவுகள், கரும்பு சக்கை கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவது. மேலும் CBG மூலம் கிரீன் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். இதை வைத்து வீட்டு உபயோகத்திற்காகக் குழாய் வாயிலாக வரும் இயற்கை எரிவாயுவிற்கு மாற்றாகப் பயன்படுத்த முடியும்.

பயோகேஸ் வர்த்தகம்

பயோகேஸ் வர்த்தகம்

அனைத்திற்கும் மேலாக இந்தக் கம்பிரஸ்டு பயோகேஸ்-ஐ (compressed biogas - CBG) எரிவாயுவில் இயங்க கூடிய வாகனங்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் ரீடைல் எரிபொருள் விற்பனை நிலையங்கள் இருக்கும் காரணத்தால் இதைப் பயோகேஸ் உற்பத்தி மூலம் மிகப்பெரிய வருமானத்தைப் பார்க்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+