2023ல் பெரும் இழப்பு.. அதானி, அம்பானி, தமனி.. மும்மூர்த்திகளின் பெரும் வீழ்ச்சி..!

ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலின்படி, கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ராதாகிஷன் தமனி ஆகியோர் 3 பேர் 2023 ஆம் ஆண்டின் முதல் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பில்லியனர்கள்.

அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் மற்ற ஒன்பது அதானி குழும நிறுவனங்களுக்குத் தலைமை பொறுப்பில் இருந்துக்கொண்டு கௌதம் அதானி நிர்வாகம் செய்து வருகிறார், இவருடைய மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி அதானி குழும பங்குகள் தான் உள்ளது.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு கௌதம் அதானி சொத்து மதிப்பில் இதுவரை 80.60 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் உலக டாப் 500 பணக்காரர்களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவராகக் கௌதம் அதானி உருவெடுத்துள்ளார்.

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானிக்கு அடுத்தப்படியாக அவருக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி, 5.38 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார். அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் (டிமார்ட் லிமிடெட்) உரிமையாளர் ராதாகிஷன் தமானி தனது சொத்து மதிப்பில் 2.67 பில்லியன் டாலரை இழந்துள்ளார்.

கௌதம் அதானியின் பெரும் வீழ்ச்சி

கௌதம் அதானியின் பெரும் வீழ்ச்சி

செப்டம்பர் 2022ல் இருந்து கௌதம் அதானி தனது மொத்த சொத்து மதிப்பில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு குறைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ், அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் உள்ளிட்ட அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியால் இப்போது கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 39.9 பில்லியன் டாலராகச் சரிந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்

இதன் மூலம் ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ்-ல் ஒரு காலத்தில் 3 இடம் வரையில் உயர்ந்த கௌதம் அதானி சொத்து மதிப்புத் தற்போது வெறும் 39.9 பில்லியன் டாலர் உடன் 30வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

இதேபோல் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 81.7 பில்லியன் டாலராக உள்ளது, டிமார்ட் ராதாகிஷன் தமானி சொத்து மதிப்பு 16.7 பில்லியன் டாலராக உள்ளது.

BSE500 குறியீடு

BSE500 குறியீடு

அதானியின் விஷயத்தில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் மூலம் பங்குக் கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவரது 10 குழுமப் பங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உண்மையில், ஜனவரி 24 முதல் BSE500 குறியீட்டில் அதிகம் பாதிக்கப்பட்ட டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் அதானி குழுமப் பங்குகளாகும்.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவுகளின் படி, ஜனவரி 24 முதல் மும்பை பங்குச்சந்தையில் அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் (81 சதவீதம் சரிவு), அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (75 சதவீதம் சரிவு), அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (74 சதவீதம் சரிவு) மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (61 சதவீதம் சரிவு) என அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் 2.79 சதவீத வீழ்ச்சி அடைந்த நிலையில் இவருடைய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 7.35 சதவீதம் சரிந்துள்ளன.

மேலும் முகேஷ் அம்பானி கட்டுப்பாட்டில் இருக்கும் RIIL, Den Networks, Hathway Cable & Datacom, Just Dial Limited மற்றும் Network 18 ஆகியவை 2023 ஆம் ஆண்டில் சிறிதளவு மட்டுமே சரிந்துள்ளது.

முக்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

முக்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

RIIL - Reliance Industrial Infrastructure Limited (14.3 சதவீதம் சரிவு), Network 18 Media & Investments (13.42 சதவீதம் சரிவு), Hathway Cable & Datacom (13.35 சதவீதம் சரிவு) மற்றும் Den Networks (13.17 சதவீதம் சரிவு) ஆகியவை 2023 ஆண்டு இரட்டை இலக்க அளவில் சரிவை பதிவு செய்துள்ளது.

 ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் பங்குகள் இந்த ஆண்டுப் பிப்ரவரி 24 வரையிலான காலத்திற்கு 14 சதவீதம் சரிந்துள்ளன. ராதா கிஷன் தமனி மற்றும் அவரது குடும்பத்தினர் அடங்கிய நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குரூப், டிசம்பர் 31 நிலவரப்படி அவென்யூ சூப்பர்மார்ட்ஸில் 74.99 பங்குகளை வைத்திருந்தது.

26000 கோடி நஷ்டம்

26000 கோடி நஷ்டம்

Trendlyne தகவல் படி, ராதாகிஷன் தமனி ரூ.1,58,274.70 கோடி மதிப்புள்ள 15 நிறுவன பங்குகளை வைத்திருந்துள்ளார். டிசம்பர் 31 நிலவரப்படி அவரது பங்கு போர்ட்ஃபோலியோ 1.84 லட்சம் கோடியாக இருந்தது. விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ் (3.92 சதவீதம் YTD), இந்தியா சிமெண்ட்ஸ் (14.97 சதவீதம் குறைந்தது), டிரெண்ட் (3 சதவீதம் குறைந்தது) மற்றும் சுந்தரம் ஃபைனான்ஸ் (பிளாட்) ஆகியவை அவருடைய முக்கிய முதலீடுகளில் அடக்கம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+