சமீபத்திய ஆண்டுகளாக போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வந்த, இந்தியாவின் இருபெரும் பில்லியனர்களின் சொத்துமதிப்பு, கடந்த சில மாதங்களாக சரிவினைக் கண்டு வருகின்றது.
குறிப்பாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக ஏற்றம் கண்டு, சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறினார். ஆனால் இந்த வெற்றி வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை எனலாம்.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் ஆண்டு கணக்கில் ஏற்றம் கண்ட சொத்து மதிப்பு, கடந்த மூன்று வாரங்களில் மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
கெளதம் அதானி
இரண்டாம் இடத்தில் இருந்த கெளதம் அதானி இன்று 29வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அந்தளவுக்கு சரிவினைக் காணவில்லை என்றாலும், மெதுவாக குறைந்து வருகின்றது.
மொத்தத்தில் நடப்பு ஆண்டில் டாப் வெல்த் லூசர்கள் பட்டியலில் அம்பானியும், அதானியும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத்தின் மோசடிகள்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக கொடி கட்டி பறந்து வந்த அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி, பல்வேறு மோசடியான குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பங்கு விலைகளை சந்தையில் உயர்த்திக் காட்ட பல மோசடிகளை அரங்கேற்றியதாக, அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் பெரும் வெடியாய் தூக்கி போட்டது.
தினசரி அதல பாதாளம்
இந்த அறிக்கையானது வெளியானதில் இருந்தே அதானி குழும பங்குகள் அதல பாதாளம் தொட்டுள்ளன. இன்னும் சரிவுப் பாதையிலேயே இருந்து வருகின்றன. கடந்த மாத இறுதியில் இருந்து சரியத் தொடங்கிய இந்த பங்கின் விலையானது, தற்போது வரையில் சரிவு பாதையிலேயே இருந்து வருகின்றது. இது இன்னும் சரிவினை காணலாம். முதலீட்டாளர்கள் இன்னும் சிறிது காலத்திற்கு அதானி குழும பங்குகளிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது என சந்தை நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
தினசரி மோசமான சரிவு
தினசரி தொடக்கத்திலேயே பெரும்பாலான அதானி குழும பங்குகள் லோவர் சர்க்யூட் அல்லது 10% சரிவில் தான் தொடங்குகின்றன. அதானி குழும பங்குகளின் தாக்கத்தினால் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் உள்ளது எனலாம்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் 5 பில்லியனுக்கும் அதிகமான அளவு சரிவினைக் கண்டுள்ளது. ஆக இதன் காரணமாக 2023ல் அதானி மற்றும் அம்பானி என பில்லியனர்களின் சொத்து மதிப்பானது நடப்பு ஆண்டில் மோசமான சரிவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மட்டு எவ்வளவு சரிவு தெரியுமா?
அதானி குழுமத்தின் சரிவானது பிப்ரவரி மாதம் வரையிலான சரிவின் மத்தியில் 100 பில்லியன் டாலருக்கும் மேலாக சரிவினை கண்டுள்ளது. தொடர்ந்து பலவும் லோவர் சர்க்யூட் ஆகி வருகின்றன. அதானி குழுமத்தினை சேர்ந்த 10 பங்குகளும் கடந்த புதன் கிழமையன்று சரிவிலேயே முடிவடைந்தன. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு சிக்கலான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இன்று மட்டும் அதானி குழும பங்குகள் சரிவால் சந்தை மதிப்பு 51, 294 கோடி ரூபாய் சரிவில் காணப்படுகின்றது.
ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்
ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் அறிக்கையின் படி அதானி குழுமத்தின் சொத்து மதிப்பானது நடப்பு ஆண்டில் இதுவரையில் 78 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
அம்பானியின் சொத்து மதிப்பானது 5 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. மொத்தமாக 83 பில்லியன் டாலருக்கும் மேலாக சரிவினை கண்டுள்ளது. முன்னதாக அதானி அம்பானியை முந்தைய நிலையில், இந்த மாதம் அம்பானி அதானியினை விட முந்தினார்.
எவ்வளவு சொத்து மதிப்பு?
பிப்ரவரி 23, நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 81.5 பில்லியன் டாலராகும். இவர் தற்போது உலகின் 12 பணக்காரராக உள்ளார்.
இதே கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 42.7 பில்லியன் டாலராகும். இவர் தற்போது 29வது இடத்தில் உள்ளார். இது ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications