ஒரே நாளில் ரூ.83000 கோடி இழப்பு.. அழுது புரளும் கௌதம் அதானி.. நாளையும் தொடரும்..!!

அமெரிக்க நீதிமன்றம் லஞ்சக் குற்றச்சாட்டில் கைது வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து, இந்திய கோடீஸ்வரரும் தொழில் அதிபருமான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்கள், கிட்டத்தட்ட 15 சதவீதம் குறைந்து 59.4 பில்லியன் டாலராக உள்ளது.

அமெரிக்க நீதித்துறை மற்றும் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் நேற்று, அதானி குடும்பமும் ஆறு பேரும் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு $265 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. இதனையடுத்து அவரது நிகர மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் ரூ.83000 கோடி இழப்பு.. அழுது புரளும் கௌதம் அதானி.. நாளையும் தொடரும்..!!

பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அதானி குழுமத்தின் பங்குகளில் பெரும் சரிவு ஏற்பட்டது, இதன் காரணமாக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் நிகர மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கௌதம் அதானியின் நிகர மதிப்பு வியாழன் அன்று ஒரே நாளில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் குறைந்துள்ளது. இதனுடன், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் மொத்த சொத்துக்களிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ரியல் டைம் கோடீஸ்வரர் பட்டியல் ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, கௌதம் அதானி உட்பட 7 பேருக்கு எதிராக லஞ்சம் மற்றும் மோசடி திட்டமிடல் குற்றச்சாட்டில் அமெரிக்க விசாரணையைத் தொடங்கிய பிறகு, கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சரிந்து 59.3 பில்லியன் டாலர்களாக உள்ளது சகோதரர் வினோத் அதானி 4.7 பில்லியன் டாலர் குறைந்து 15.5 பில்லியன் டாலராக உள்ளது.

குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதானியில் நிகர மதிப்பு 58.5 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. அதானி ஃபோர்ப்ஸின் பணக்காரர்கள் பட்டியலில் 22 வது இடத்தில் இருந்து 25 வது இடத்திற்கு கீழே சரிந்தார். இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார இந்தியராக உள்ளார்.

265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது: புதனன்று, அமெரிக்க நீதித்துறை மற்றும் செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் கமிஷன், அதானி குடும்பமும் ஆறு பேரும் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு $265 மில்லியன் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டியது. இதற்குப் பிறகு, வியாழக்கிழமை பங்குச் சந்தை தொடங்கியவுடன், அதானி குழுமத்தின் பங்குகள் 20 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. 2023 இன் ஹிண்டன்பர்க் அறிக்கை குண்டுவெடிப்புக்குப் பிறகு அதானியின் குழுவிற்கு விழுந்த மோசமான அடி இதுதான்.

அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி சொல்யூஷன்ஸ் வீழ்ச்சி: அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் ஆகியவற்றில் 20 சதவீதம் சரிவு ஏற்பட்டது. இது தவிர, அதானி போர்ட் மற்றும் அம்புஜா சிமென்ட் மற்றும் அசிசி சிமெண்ட் ஆகியவற்றின் பங்குகள் 10 சதவிகிதம் லோயர் சர்க்யூட்டில் வர்த்தகமாகின. அதே நேரத்தில் அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி பவர் 13-14 சதவிகிதம் சரிந்துள்ளன.

ராஜீவ் ஜெயின்: இதற்கிடையில், முதலீட்டு நிறுவனமான GQG பார்ட்னர்ஸ், 2023ஆம் ஆண்டில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜீவ் ஜெயின் அதானி பங்குகளில முதலீடு செய்தார். இதனால், ஆஸ்திரேலியன் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்டுள்ள GQG பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் பங்குகளிலும் 26 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+