கௌதம் அதானி-யின் அடுத்த திட்டம் இதுதான்.. டார்கெட் குஜராத்..!

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் 3வது பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி 2022 ஆம் ஆண்டில் மட்டும் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பைச் சேர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் குறியாய் இருக்கிறார் கௌதம் அதானி.

அந்த வகையில் ரீடைல் முதல் டெக் வரையில், மின்சாரம் முதல் கச்சா எண்ணெய் வரையில் அனைத்து துறையிலும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் கௌதம் அதானி அடுத்தச் செய்யப்போகும் திட்டத்தைப் பட்டியலிட்டு உள்ளார்.

பெட்ரோ கெமிக்கல்

பெட்ரோ கெமிக்கல்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி, குஜராத்தில் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் சுமார் 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஆப்

சூப்பர் ஆப்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி, டாடா குழுமத்தை போலவே அதானி விமான நிலைய பயணிகளை மற்ற அதானி குழும சேவைகளுடன் இணைக்க அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் சூப்பர் ஆப் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NDTV நிறுவன கைப்பற்றல்

NDTV நிறுவன கைப்பற்றல்

கௌதம் அதானி மீடியா துறையில் இறங்க மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில் ஏற்கனவே பல நிறுவனத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முதலீடு செய்துள்ள நிலையில் NDTV நிறுவனத்தைக் கைப்பற்றுதல் குறித்துப் பேசிய அதானி, அதை ஒரு வணிக வாய்ப்பாகப் பார்க்காமல் "பொறுப்பாக" கருதுவதாகக் கூறினார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

பெட்ரோ கெமிக்கல் துறையில் அதானி குழுமம் நுழைவது மூலம் முகேஷ் அம்பானிக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் கேட்டபோது கௌதம் அதானி மறுத்தார். இதில் போட்டி எதுவும் இல்லை. இந்தியா ஒரு பெரிய வளர்ச்சி சந்தை, இங்கு அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.

இந்தியன் ஆயில்டேங்கிங்

இந்தியன் ஆயில்டேங்கிங்

அதானி போர்ஸ் அண்ட் ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனம் தற்போது இந்தியன் ஆயில்டேங்கிங் நிறுவனத்தில் 49.3 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் தற்போது கச்சா எண்ணெய் துறையில் இறங்கியது மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானியின் கணிப்பின் இந்தியாவில் அதிகரித்து வரும் நுகர்வு மற்றும் சமூக மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக, இந்தியாவின் பொருளாதாரம் 2050 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் டாலர்களாக வளரும் என்று கூறியுள்ளார்.

1 டிரில்லியன் டாலர்

1 டிரில்லியன் டாலர்

அடுத்தப் பத்து ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களுக்கும் 1 டிரில்லியன் டாலர்கள் அதிகரிக்கத் தொடங்கும். முதலீடுகளுக்கான ஏற்ற மற்றும் கவர்ச்சிகரமான சந்தையைகா இந்தியா மாறும். 2050ம் ஆண்டுக்குள் சர்வதேச ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 20 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என்று கௌதம் அதானி கணித்துள்ளார்.

கிளீன் எனர்ஜி

கிளீன் எனர்ஜி

நிலக்கரி முதல் துறைமுகங்கள் வரையில் பல துறையில் வர்த்தகம் செய்யும் கௌதம் அதானி கிளீன் எனர்ஜி துறையில் மட்டும் சுமார் 70 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்வதற்கான திட்டம், உறுதிப்பாட்டையும் கௌதம் அதானி மீண்டும் வலியுறுத்தினார்.

எனர்ஜி தேவை

எனர்ஜி தேவை

2050 ஆம் ஆண்டளவில், பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இந்தியாவின் எனர்ஜி தேவை 400 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தத் தேவையைப் பூர்த்திச் செய்ய இந்தியா தற்போது பயன்படுத்தும் எனர்ஜி முறையைத் தாண்டி பிற முக்கியத் திட்டத்தைப் பயன்படுத்த உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+