உலக கோடீஸ்வரர் பட்டியலில் தற்போது கடுமையான போட்டி நிலவி வருகிறது. கடுமையான ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. இந்திய பணக்காரர்கள் அதானி குழும தலைவர் கௌதம் அதானி 100 பில்லியன் கிளப்பில் இருந்து வெளியேறினார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இந்திய கோடீஸ்வரர்களுக்கு பெரும் நஷ்டத்திற்குரிய வாரமாகவே அமைந்துள்ளது. உலகப் பங்குச் சந்தைகளின் பலவீனம் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவை இந்திய பங்குச் சந்தைகளில் இருண்ட நிலைக்கு தள்ளின. வெளிநாட்டு முதலீட்டாளர்களும் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்தியதால், ஐந்து நாட்களில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 4,243.17 புள்ளிகள் (4.94%)க்கும் அதிகமாக சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1,214.80 புள்ளிகள் (4.63%) சரிந்தது. இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்களின் இழப்பு 16 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.

இந்திய பில்லியனர்களுக்கும் பங்குச் சந்தைக்கும் கடந்த வாரம் ஏழாம் பொருந்தமாகவே இருந்தது. பங்குச் சந்தைகளின் சரிவு கோடீஸ்வரர்களின் செல்வத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த வெள்ளியன்று, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது செல்வத்தில் 1.62 பில்லியன் டாலர்கள் அதாவது தோராயமாக ரூ. 13,612 கோடியை இழந்தார்.
அறிக்கைகளின்படி, அம்பானியின் நிகர மதிப்பு தற்போது 105 பில்லியன் டாலர்கள் ஆகும். அதே சமயம் உலக கோடீஸ்வரர் பட்டியலில் 14வது இடத்தில் உள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக உள்ள அம்பானியின் இந்த ஆண்டு சொத்து மதிப்பு 8.93 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 100 பில்லியன் டாலர் கிளப்பில் இருந்து வெளியேறியுள்ளார். பங்குச் சந்தை வீழ்ச்சியால் அதானியின் சொத்துக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அவரது நிகர மதிப்பு 942 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது. தற்போது அதானியின் மொத்த சொத்து மதிப்பு 99.5 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு செல்வ வளர்ச்சியில் அதானி அம்பானியை முந்தியுள்ளார். இந்த ஆண்டு அதானியின் சொத்து அதிகரிப்பு 15.2 பில்லியன் டாலர் ஆகும். வால்மார்ட்டின் நிறுவனர்களான வால்டன் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செல்வத்தில் அதானியை மிஞ்சியுள்ளனர். ஜிம் வால்டனின் நிகர மதிப்பு 103 பில்லியன் டாலர் ஆகும். ராப் வால்டன் மற்றும் ஆலிஸ் வால்டன் ஆகியோர் புதிதாக 100 பில்லியன் லாடர் கிளப்பில் இணைந்தனர்.
அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புக் கொள்கையும் அதைத் தொடர்ந்து வந்த பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அறிக்கைகளும் அமெரிக்கச் சந்தைகளுக்கு ஏற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தை நன்றாகச் செயல்பட்டது. அமெரிக்க பில்லியனர்களின் செல்வத்தை இது பெருமளவு உயர்த்தியது.
உலக கோடீஸ்வரரான அமெரிக்க வணிக அதிபரான எலான் மஸ்க்கின் நிகர மதிப்பு 6.73 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 263 பில்லியன் டாலர்கள் ஆகும். மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், 211 பில்லியன் டாலர் சொத்துக்களுடன், மஸ்க் உடனான போட்டியை கடுமையாக்கியுள்ளார். அமேசானின் ஜெஃப் பெசோஸ் 209 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications