உலகில் உள்ள பணக்காரர்கள் குறித்து அவ்வப்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் அசைக்க முடியாத இடத்தில் எலான் மஸ்க் இருக்கும் நிலையில் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் மட்டும் அவ்வப்போது மாறிவருகின்றனர்.
இந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு முன் இந்தியாவின் கோடீஸ்வரர் அதானி இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில் சமீபத்தில் அவர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் மூன்றாவது இடத்திற்கு மீண்டும் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஃபோர்ப்ஸ் பட்டியல்
உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிடும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் தற்போதைய உலக கோடீஸ்வரர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில் கவுதம் அதானிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்ததை அடுத்து அவருக்கு மீண்டும் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
இரண்டாம் இடம்
கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டாம் இடத்தை பிடித்த கவுதம் அதானி, அதன் பின்னர் பங்குச் சந்தையில் அவரது நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததால் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது அவர் மீண்டும் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி நிறுவனத்தின் பங்குகள்
இந்திய பங்குச்சந்தை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக உயர்ந்து வருவததன் காரணமாக அதானி நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகிறது. இதுவே அவர் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதற்கு காரணம் ஆகும். குறிப்பாக நேற்று ஒரே நாளில் அவரது நிறுவனத்தின் பங்குகள் $314 மில்லியன் உயர்ந்துள்ளதாகவும் அதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு $131.9 பில்லியன் என்றும் கூறப்பட்டுள்ளது.
அமேசான் ஜெஃப் பெஜோஸ்
எனவே கவுதம் அதானி மூன்றாவது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெஜோஸ் அவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். ஜெஃப் பெஜோஸ் அவர்களுக்கு தற்போது $126.9 பில்லியன் சொத்து மதிப்பு உள்ளது என்பதும் அவர் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க்
வழக்கம்போல் டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் $223.8 பில்லியன் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைக்கு எலான் மஸ்க்கை முந்துவது என்பது 2 முதல் 4 வரை உள்ள கோடீஸ்வரர்களுக்கு இயலாத காரியம் என தெரிகிறது.
மியூசிக்கல் சேர்
ஆனால் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடம் என்பது மியூசிக்கல் சேர் போல் அவ்வப்போது மாறிக் கொண்டே வருகிறது என்பதும், எப்போது வேண்டுமானாலும் இந்த இடங்கள் யாருக்கு வேண்டுமானாலும் மாறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications