இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல் ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி நீண்ட காலமாகப் போட்டிப்போட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரும் தத்தம் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு அடிப்படையில் இன்று முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.
ப்ளூம்பெர்க் தளத் தரவுகள்
ப்ளூம்பெர்க் தளத்தின் தரவுகள் அடிப்படையில் முகேஷ் அம்பானி 91 பில்லியன் டாலருடனும், கௌதம் அதானி 88.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருந்தாலும் ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டைக் கணக்கிடும் போது முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.
சவுதி ஆராம்கோ
சவுதி ஆராம்கோ நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை எனத் தனது இறுதி முடிவை வெளியிட்ட பின்பு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு வருகிறது. இன்றைய வர்த்தக முடிவில் நிலையில் ரிலையன்ஸ் பங்குகள் சுமார் 1.48 சதவீதம் சரிந்து 2,350.90 ரூபாய் அளவீட்டை தொட்டு உள்ளது.
அதானி குரூப்
இதேவேளையில் அதானி குரூப் நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2.94 சதவீத உயர்வுடன் அதானி எண்டர்பிரைசர்ஸ், 4.87 சதவீத உயர்வில் அதானி போர்ட்ஸ், 0.50 சதவீத உயர்வில் அதானி டிரான்ஸ்மிஷன், 0.33 சதவீத உயர்வில் அதானி பவர் பங்குகள் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதன் மூலம் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பை விடவும் அதிகரித்துள்ள காரணத்தால் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியா மற்றும் ஆசியாவின் பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார்.
ஒரு வருட வளர்ச்சி
ப்ளூம்பெர்க் தரவுகள் அடிப்படையில் இந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 18.6 சதவீதம் அதிகரித்து 14.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆனால் கௌதம் அதானி சொத்து மதிப்பு 162.7 சதவீதம் உயர்ந்து 55.0 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications