அதானி குழுமம் மார்ச் 2024க்குள் சுமார் 16500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அதானி குழுமத்திற்கு அடுத்த நிதியாண்டு மிகவும் சவாலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருந்த அதானி குழுமம் சந்தை மதிப்பில் ஏற்பட்ட பாதிப்பால் அதிக மதிப்புடைய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் என்ற இடத்தை இழந்துள்ளது.
ஆயினும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை மூலம் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைக்கும் வகையில் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பல முக்கியமான முடிவுகளையும், பணிகளையும் அதானி குழுமம் செய்து வருகிறது.
அதானி குழுமம்
அதானி குழுமம் அமெரிக்காவில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க வாட்ச்டன் லிப்டன் என்னும் அமெரிக்காவிலேயே மிகவும் கஸ்ட்லியான சட்ட ஆலோசனை நிறுவனத்தை நியமித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
கௌதம் அதானி
இந்தியாவின் 2வது பெரிய பணக்காரரான கௌதம் அதானி ஏற்கனவே பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் வேளையில், புதிய நிதியாண்டில் கூடுதலான பிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளார். ஒரு பக்கம் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. மறுபக்கம் பல்வேறு முனைகளிலிருந்து ஆய்வு.
2 பில்லியன் டாலர்
இந்த நிலையில் அதானி குழும நிறுவனங்கள் ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் அதானி குழுமம் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான கடனை ரீபேமெண்ட் செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் படி 16,570 கோடி ரூபாய்.
8 நிறுவனங்கள்
அதானி குழுமம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் செப்டம்பர் 30 வரையில் இக்குழுமத்தின் 8 நிறுவனங்களின் மொத்த கடன் 24.1 பில்லியன் டாலர். இதேபோல் டிசம்பர் 31 முடிவில் இந்த 8 நிறுவனங்களின் கேஷ் மற்றும் கேஷ் ஈக்வலென்ட் 31,646 கோடி ரூபாய்.
பட்டியல்
மேலும் அதானி குழுமம் குறிப்பிட்டு உள்ள இந்த 8 நிறுவனங்கள் பட்டியலில் அதானி போர்ட்ஸ், அதானி கிரீன், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி எண்டர்பிரைசஸ், அம்புஜா சிமெண்ட், ஏசிசி.
செலுத்த வேண்டிய கடன்
இந்த நிலையில் மார்ச் 2024க்குள் அதானி போர்ட்ஸ் 6631 கோடி ரூபாய், அதானி டோட்டல் கேஸ் 513 கோடி ரூபாய், அதானி கிரீன் 1,529 கோடி ரூபாய், அதானி டிரான்ஸ்மிஷன் 836 கோடி ரூபாய், அதானி பவர் 3,349 கோடி ரூபாய், அதானி எண்டர்பிரைசஸ் 4308 கோடி ரூபாய் அளவிலான கடனை செலுத்த வேண்டும்.
நிதி ஆதாரங்கள், சொத்துக்கள்
இதே வேளையில் அதானி குழுமத்தின் இந்த 8 நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் என அதானி குழுமம் கூறுகிறது. அதானி குழுமத்திடம் கடன்களைச் செலுத்த போதுமான நிதி ஆதாரங்களும், சொத்துக்களும் இருந்தாலும், இந்தக் கடனுக்கு மறு நிதியளிப்புச் செய்வதில் அதிகப்படியான சவால் இருக்கும்.
பெரும் சவால்
தற்போதைய சூழ்நிலையில் செபியின் பல்வேறு கோணங்களில் செய்யப்படும் ஆய்வுகள் மற்றும் அதன் முடிவுகளுக்காகவும் முதலீட்டாளர்கள் காத்திருக்கும் வேளையில் பல்வேறு நிதி அமைப்புகளும், ரேட்டிங் ஏஜென்சிகளும் அதானி குழுமத்தின் மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. இதனால் புதிய கடன் வாங்குவதிலும், ஏற்கனவே வாங்கிய கடனுக்கு மறுநிதியளிப்பு பெறுவதற்கும் கடுமையான சவாலை அதானி குழுமம் எதிர்கொள்ளும்.


Click it and Unblock the Notifications