இந்திய சிமெண்ட் உற்பத்தியில் பெரும் சக்தியாக மாறி வரும் அதானி குழுமம், ஆரம்பத்தில் அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றை வாங்கி எப்படி இத்துறைக்குள் நுழைந்ததோ, அதேபோல் தற்போது நாட்டில் இருக்கும் பல சிமெண்ட் நிறுவனத்தை வாங்கி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி சிமெண்ட் நிறுவனம் முதல் முறையாகத் தென்னிந்தியாவில் ஒரு சிமெண்ட் நிறுவனத்தை வாங்கி தனது ஆதிக்கத்திற்குப் பிள்ளையார் சுழிப்போட்டு உள்ளது.

அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டை ரூ.10,422 கோடிக்கு வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
அதானி சிமெண்ட் பிரிவு அடுத்தடுத்து 4 சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களை வாங்கப்போகிறது என நேற்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்ட நிலையில் அடுத்த நாளே ஹைதராபாத் பென்னா சிமெண்ட் நிறுவனத்தை வாங்குகிறது அதானி.
தற்போது செய்துள்ள ஒப்பந்தம் படி அம்புஜா சிமெண்ட்ஸ், பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ப்ரோமோட்டர் குழுவான டி. பிரதாப் ரெட்டி மற்றும் குடும்பத்திடம் இருந்து 100% பங்குகளை வாங்கவுள்ளது.
இந்த பங்குகளுக்கான பணத்தை அம்புஜா சிமெண்ட்ஸ் முழுவதுமாக நிறுவனத்தின் உள் சேமிப்பு தொகையில் இருந்து அளிக்க உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் முடிவடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கைப்பற்றல் மூலம் பென்னா சிமெண்ட்ஸின் தற்போதைய விற்பனையாளர்கள் அதானி சிமெண்ட்ஸ் லிமிடெட் உடன் இணைக்கப்படுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பென்னா சிமெண்ட்ஸ் கைப்பற்றல் மூலம் இந்தியாவில் அதானி சிமெண்ட்ஸின் சந்தை பங்கீடு சுமார் 2% அளவு அதிகரிக்கும், தென்னிந்தியாவில் சுமார் 8% அளவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனம் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளதோடு, இந்நிறுவனத்திடம் போதுமான சுண்ணாம்புக் கற்கள் இருப்பு உள்ளது, இதை பயன்படுத்தி அதானி சிமெண்ட்-ன் பிற தொழிற்சாலையிலும் சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
இதேபோல் பென்னாரில் உள்ள பெரும்பான்மை சிமெண்ட் முனையங்கள், மூலம் கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளுக்கு வேகமாகவும், குறைவான விலையிலும் சிமெண்ட் சப்ளை செய்ய முடியும். இதைவிட முக்கியமாகக் கடல் வழியாக இலங்கைக்கு சிமெண்ட் அனுப்பும் புதிய வழியும் அதானி குழுமத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த கையகப்படுத்தல் மூலம் கொல்கத்தா, கோபால்பூர், காரைக்கால், கொச்சி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இருக்கும் மிகப்பெரிய சிமெண்ட் முனையங்களுடன் அதானி சிமெண்ட்ஸ் இணைந்து கடல் போக்குவரத்தை வலுப்படுத்தும் என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications