இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் ஹிண்டன்பர்க் பிரச்சனையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேறி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் முக்கிய முதலீடுகளை, கூட்டணியை அறிவித்து வருகிறது. இதோடு அதானி குழும நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சிறப்பாக இருந்த நிலையில் பங்குச்சந்தையிலும் பெரிய அளவில் எதிரொலித்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் அதானி குழுமம் கைப்பற்றியுள்ள அம்புஜா சிமெண்ட்ஸ் வாயிலாக Sanghi Industries என்னும் பிரபலமான சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்ற திட்டமிட்டு, அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை புதன்கிழமை இரு நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிண்டன்பர்க் விவகாரத்திற்கு பின்பு அதானி குழுமம் TRAINMAN நிறுவனத்தில் செய்த முதலீட்டை தொடர்ந்து 2வது முதலீடாகவும், அதுவும் பெரிய முதலீடாக இந்த Sanghi Industries முதலீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்புஜா சிமெண்ட்ஸ் அதானி குழுமத்தின் இன்பராஸ்டக்சர் வர்த்தகத்திற்கு உறுதுணையாக இருக்கும் வேளையில் தற்போது Sanghi Industries பங்குகளை கைப்பற்றுவதன் மூலம் அதன் வர்த்தகம், உற்பத்தி, விநியோகம் என அனைத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.
Sanghi Industries நிறவனம் மேற்கு இந்தியா பகுதியில் உயர்தர சிமெண்ட் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக Sanghi Industries நிறுவனம் தனிநபர் வீடுகள், கட்டுமான நிறுவனங்கள், பில்டர்கள் என கட்டுமான துறையில் இருக்கும் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு கட்டுமான உதவிகளை வழங்கி வருகிறது. Sanghi Industries நிறுவனம் Sanghi Group கீழ் இயங்கி வருகிறது, இந்த குழுமம் ஆனந்த் பிரகாஷ் சங்கி மற்றும் அவர்களுடைய சகோதரர்கள் இணைந்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.
அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ், வருடத்திற்கு 6.1 மில்லியன் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி திறன் கொண்ட நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை வாங்க உள்ள செய்தி முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை, இதன் வாயிலாக அம்புஜா சிமெண்ட் பங்குகள் 1.79 சதவீதம் சரிந்து 453.30 ரூபாய் அளவில் உள்ளது. சங்கி இண்டஸ்ட்ரீஸ் தற்போது 6000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications