உலக பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீது அமெரிக்காவில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு மோசடி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அமெரிக்க குற்றவியல் துறை, கௌதம் அதானி மற்றும் அவரது 2 உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர், அமெரிக்காவில் இந்திய அதிகாரிகளுக்கு 26.5 கோடி டாலர் லஞ்சம் கொடுத்து, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான லாபம் கிடைக்கும் ஒப்பந்தங்களைப் பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மூடப்பட்ட 5 குற்ற அறிக்கைகள் நேற்று திறக்கப்பட்டது, இந்த 5 வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர்கள் கௌதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின் ஆகியோர் தான்.

இந்த மூவரும் இணைந்து செக்யூரிட்டீஸ் மற்றும் வயர் பிராட் குற்றங்களைச் செய்து, பொய்யான மற்றும் தவறான விபரங்களைக் கொடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் முதலீட்டைத் திரட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த மாபெரும் மோசடிக்கு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு புதுப்பிக்கத்தக்க எனர்ஜி நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால் மற்றும் கனடா நாட்டின் நிறுவன முதலீட்டாளர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சிரில் கபேன்ஸ், சவுரப் அகர்வால் மற்றும் தீபக் மல்ஹோத்ரா ஆகியோரும் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர்.
அமெரிக்க சந்தையில் இருந்து முதலீடு பெறுவதற்காக கௌதம் அதானி, சாகர் அதானி, வினித் ஜெயின் ஆகியோர் இணைந்து சுமார் 250 மில்லியன் டாலர் அளவிலான லஞ்சத்தை இந்திய அரசு அதிகாரிகளுக்குப் பெரிய அளவிலான திட்ட ஒப்பந்தத்தை உருவாக்கி, அதற்கு பொய்யான தகவல்களையும், ஆவணங்களையும் உருவாக்கி மோசடி செய்துள்ளதாகவும், இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது வழக்கு தொடருவதாகக் கிழக்கு நியூயார்க் மாவட்ட அட்டர்னி Breon Peace, தெரிவித்தார். இந்த வழக்கில் FBI, கிரிமினல் பிரிவும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்ட உள்ளது.
FBI-யின் உதவி இயக்குநர் டென்னி கூறுகையில், "கௌதம் அதானி மற்றும் 7 அதிகாரிகள் இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தங்களது சொந்த வணிக நலன்களுக்காக லாபகரமான ஒப்பந்தங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கௌதம் அதானி மற்றும் மற்ற குற்றவாளிகள் முதலீட்டாளர்களை ஏமாற்றி, லஞ்சம் மற்றும் ஊழல் குறித்த பொய்யான தகவல்களின் அடிப்படையில் மூலதனத்தைத் திரட்டினர். மேலும், மற்ற குற்றவாளிகள் அரசாங்கத்தின் விசாரணையைத் தடுப்பதன் மூலம் ஊழல் சதித்திட்டத்தை மறைக்க முயன்றுள்ளனர்," என்றும் கூறினார்.
இந்த குற்றச்செயல்கள் 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் நடந்துள்ளதாகவும், இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் திட்டத்தை உருவாக்கும் மாபெரும் ஒப்பந்தத்தை இந்திய அரசிடம் இருந்து பெறவே அரசு அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் டாலர் வரையில் கடன் கொடுத்துள்ளது கௌதம் அதானி & டீம். இந்த ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்தே அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீட்டு திரட்டியுள்ளது என அமெரிக்க நிதி துறை அறிக்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் கௌதம் அதானி அடுத்த 20 வருடத்தில் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகையை வரிக்கு பிந்தைய லாபமாக பெறுவார் என அமெரிக்க நிதி துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படி லட்சம் கொடுத்து இந்திய அரசிடம் பெற்ற சோலார் எனர்ஜி சப்ளை கான்டிராக்ட் அடிப்படையாக வைத்து, அதானி குழுமம் அதன் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் ஆகியோர், அமெரிக்க கடன் வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்களை ஏமாற்றி 3 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையைக் கடன் மற்றும் பத்திரங்கள் விற்பனை மூலம் திரட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் போது பல முறை கௌதம் அதானியே நேரடியாக அவர்களை சந்தித்துள்ளார், லஞ்சம் கொடுக்கப்பட்டதைத் தனது போன் மூலம் சாகர் அதானி டிராக்கிங் செய்துள்ளார், வினித் ஜெயின் ஆவணங்களை தனது போனில் போட்டோ எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூபேஷ் அகர்வால் வாயிலாக பிற அமெரிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் பகிரப்பட்டு உள்ளது.
அதானி குழுமம் இதுவரை இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை. வாஷிங்டனில் உள்ள இந்திய தூதகமும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது பங்குச்சந்தை மோசடி, பங்குச்சந்தை மோசடி சதி மற்றும் வயர் மோசடி சதி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், அதானி குழுமத்தின் மீது அமெரிக்க பங்குச் சந்தை கண்காணிப்புக் குழு (SEC) சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications