சீன பணக்காரர்-ஐ முந்திய கௌதம் அதானி.. ஆசியாவிலேயே 2வது இடம்.. அதானியின் சொத்து மதிப்பு எவ்வளவு..?!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி கடந்த 2 வருடமாகக் குறிப்பாக லாக்டவுன் துவங்கிய நாள் முதல் தனது வர்த்தகத்தைப் பல புதிய துறைகளுக்கும், ஏற்கனவே செய்து வரும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார்.

இதன் வாயிலாகப் பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணமாக அதானி கிரீன் பங்குகள் மட்டும் கடந்த வருடம் சுமார் 370 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது, சமீபத்தில் இந்நிறுவனம் எஸ்பி எனர்ஜி நிறுவனத்தைக் கைப்பற்றித் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது.

இதோடு அல்லாமல் விமான நிலையம், சோலார், துறைமுக வர்த்தகம் விரிவாக்கம் பல துறையில் அதிரடி காட்டி வருகிறார் கௌதம் அதானி. இதன் மூலம் இவரின் சொத்து மதிப்பு தாறுமாறாக அதிகரித்துள்ளது.

 அதானி குழுமம் அதிரடி வளர்ச்சி

அதானி குழுமம் அதிரடி வளர்ச்சி

அதானி குழுமத்தின் அதிரடி வளர்ச்சியின் மூலம் இந்நிறுவனத் தலைவர் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 66.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் சீனாவின் பெரும் பணக்காரரான Zhong Shanshan-ஐ பின்னுக்குத்தள்ளி ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் ஆக உயர்ந்துள்ளார் கௌதம் அதானி.

 சீன பணக்காரர்கள்

சீன பணக்காரர்கள்

சீன பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலம் அலிபாபாவின் ஜாக்மா முதலிடம் வகித்த நிலையில், சீனா அரசின் தடையால் இவரது சொத்து மதிப்பு பெரிய அளவில் குறைந்தது. இதனால் தண்ணீர் பாட்டில் மற்றும் பார்மா நிறுவனங்களின் தலைவரான Zhong Shanshan 63.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் 2வது பணக்காரராகவும், சீனாவில் டாப் பணக்காரர் ஆகவும் இருந்தார்.

 கௌதம் அதானி சொத்து மதிப்பு

கௌதம் அதானி சொத்து மதிப்பு

இந்நிலையில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 33.8 பில்லியன் டாலர் அளவீட்டில் இருந்து 66.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அதாவது ஒரே வருடத்தில் சுமார் 32.7 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் கௌதம் அதானி.

 2வது இடத்தில் கௌதம் அதானி

2வது இடத்தில் கௌதம் அதானி

இந்த அதிரடி வளர்ச்சியின் வாயிலாக Zhong Shanshan-ன் இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் முகேஷ் அம்பானியும், 2வது இடத்தில் கௌதம் அதானியும் உள்ளனர்.

 முக்கிய நிறுவன பங்குகள் வளர்ச்சி

முக்கிய நிறுவன பங்குகள் வளர்ச்சி

கடந்த ஒரு வருடத்தில் அதானி டோட்டல் கேஸ் 1145 சதவீதம், அதானி எண்டர்பிரைசர்ஸ் 827 சதவீதம், அதானி டிரான்ஸ்மிஷன் 617 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி 433 சதவீதம், அதானி பவர் 189 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 அதானியின் பிஸ்னஸ்

அதானியின் பிஸ்னஸ்

அதானி குழுமம் தற்போது துறைமுகம், விமான நிலையம், மின்சாரம், ரிசோர்சஸ், லாஜிஸ்டிக்ஸ், அக்ரி பிஸ்னஸ், ரியல் எஸ்டேட், பைனான்சியல் சர்வீசஸ், கேஸ் டிஸ்ட்ரிபியூஷன், டிபென்ஸ் ஆகிய துறைகளில் இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+