சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது 70 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும், இதன் மூலம் நிர்வாக பொறுப்புகள் மற்றும் பதவிகளில் இருந்து விலகி, தனது மகன்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு அதிகாரத்தை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்கு நிர்வாகத்தை ஒப்படைக்க முடிவு செய்தார், இதை தொடர்ந்து தற்போது கௌதம் அதானி முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
கௌதம் அதானி-க்கு தற்போது 62 வயதாகிறது, 70 வயதில் அவர் ஓய்வு பெறும்போது, நிர்வாகத்தை நான்கு வாரிசுகள் - மகன்கள் கரண் மற்றும் ஜீத் மற்றும் அவர்களது உறவினர்கள் பிரணவ் மற்றும் சாகர் ஆகியோர் குடும்ப டிரஸ்ட் அமைப்பில் சமமான உரிமையைப் பெறுவார்கள் என கௌதம் அதானி ப்ளூம்பெர்க் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில் அதானி குழுமத்தின் நிறுவன பங்குகளை வாரிசுகளுக்கு மாற்றுவது குறித்த ஒரு ரகசிய ஒப்பந்தம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செய்யப்படும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாகவே யாருக்கு அதிகப்படியான ஆதிக்கம் நிர்வாகத்தில் இருக்கும் என தெரியப் போகிறது.
அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்த முழு விபரத்தை கௌதம் அதானி தெரிவிக்கவில்லை, இதற்கு மாறாக குடும்ப டிரஸ்ட் அமைப்பில் மட்டுமே அனைவருக்கும் சமமான உரிமை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கௌதம் அதானியின் மூத்த மகன் கரண் அதானி தற்போது அதானி போர்ட்ஸின் நிர்வாக இயக்குனராகவும், இளைய மகன் ஜீத் அதானி அதானி ஏர்போர்ட்ஸின் இயக்குனராகவும் உள்ளனர். பிரணவ் அதானி, அதானி என்டர்பிரைசஸின் இயக்குனராகவும், சாகர் அதானி தற்போது அதானி கிரீன் எனர்ஜியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் முக்கியமான சேர்மன் பதவி பிரணவ் மற்றும் கரண் ஆகியோரில் ஒருவருக்கு இறுதியில் கிடைக்கும் என்று பிளூம்பெர்க் தெரிவிக்கிறது.
"ஒரு வர்த்தகத்தில் வாரிசுக்கு நிர்வாகத்தை மாற்றுவது என்பது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் வர்த்தகத்திற்கும், வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கு வித்திடும் ஒரு விஷயம். எனவே இந்த மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டாம் தலைமுறையின் விருப்பத்தை விட்டுவிட்டேன்" என்று கௌதம் அதானி இந்த பேட்டியில் கூறினார்.
அதானி குழுமம் கடந்த 10 வருடத்தில் இந்திய வரலாற்றில் யாரும் எட்ட முடியாத வளர்ச்சியை எட்டியுள்ளது. சமையல் எண்ணெய் விற்பனையில் துவங்கி சோலார் எனர்ஜி உற்பத்தி வரையிலும், துறைமுகம் முதல் விமான நிலையம் வரையில் பல துறையில் பெரும் வர்த்தகத்தைப் பெற்றுள்ளது. இது மட்டும் அல்லாமல் அடுத்த 10 வருட வளர்ச்சிக்காக மாபெரும் முதலீட்டுத் திட்டத்தையும் அதானி குழுமம் வகுத்து அதற்கான பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
அதானி குழுமம் கௌதம் அதானி தலைமையைக் காட்டிலும் 2ஆம் தலைமுறை நிர்வாக பொறுப்புக்கு வந்த பின்பு புதிய துறையில் இறங்குவதும், அத்துறை வர்த்தகத்தைப் பல மடங்கு உயர்த்தியதிலும் பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இந்த வளர்ச்சிப் பாதை அடுத்த கரண் அதானி, ஜீத் அதானி, பிரணவ் அதானி, சாகர் அதானி ஆகியோர் தலைமையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் அதானிக்கு 2 சகோதரர்கள் வினோத் அதானி மற்றும் ராஜேஷ் அதானி. இதில் வினோத் அதானியின் மகன் தான் பிரணவ் அதானி, ராஜேஷ் அதானியின் மகன் தான் சாகர் அதானி.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications