இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மிக முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கின்றன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டதாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பல லட்சம் கோடி பிசினஸ் கொண்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறக்கூடிய அந்த மூன்று மாத காலமும் இந்தியா எங்கும், சமூக வலைத்தளங்கள் எங்கும் இந்த போட்டிகள் குறித்து தான் பரபரப்பாக பேசப்படும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான் ஐபிஎல் போட்டிகள்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் முதன் முறையாக பெங்களூர் அணி கோப்பை வென்றது. இந்த நிலையில் தான் பெங்களூர் அணி உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் அணியை விற்பனை செய்வதாக அறிவித்தது. சுமார் 17,000 கோடிக்கு தற்போது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வாங்குவதில் கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு அணியை கையகப்படுத்துவதில் பெரிய தலைகள் இடையே போட்டா போட்டி நிகழ்கிறது. சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் அடர் பூனவல்லா எப்படியாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் அணியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கிறார். ஆனால் இவருடன் வேறு சில முக்கியமான தலைகளும் ஐபிஎல் பெங்களூர் அணியை வாங்கும் போட்டியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.
அதானி குழுமத்தின் கௌதம் அதானி, ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஈக்விட்டி நிறுவனங்கள் பெங்களூரு அணியை வாங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. இதில் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தற்போதைய இணை உரிமையாளராக இருக்கிறார். இருந்தாலும் ஆர்சிபி அணியை முழுமையாக கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகிறார்.
கௌதம் அதானியை பொறுத்தவரை பல ஆண்டுகளாகவே ஐபிஎல் அணியை வாங்குவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிலேயே குஜராத் டைடன்ஸ் ஐபிஎல் அணியை வாங்க முயற்சி செய்தது அதானி குழுமம். ஆனால் அப்போது அந்த நிறுவனத்தால் குஜராத் டைடன்ஸ் அணியை கைப்பற்ற முடியவில்லை. ஆனால் மகளிர் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியை சொந்தமாக வைத்துள்ளது.
எப்படியாவது ஆண்கள் பிரிவில் ஒரு ஐபிஎல் அணியை வாங்கி விட வேண்டும் என்பதில் அதானி குழுமம் கவனம் செலுத்தி வருவதால் பெங்களூரு அணியை வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் அம்பானி, சன் குழுமம் என முன்னணி தொழில் குழுமங்கள் அனைத்துமே தங்களுக்கு சொந்தமானதாக ஒரு ஐபிஎல் அணியை வைத்திருக்கின்றன. எனவே அதானிக்கு ஒரு ஐபிஎல் அணியை சொந்தமாக வைத்திருப்பது ஒரு அந்தஸ்தாகவும் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications