Adani Capital விற்பனை.. கௌதம் அதானி திடீர் முடிவு.. போட்டிப்போடும் பெரும் தலைகள்..!

இந்தியாவின் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியானதற்குப் பின்பு பங்குச்சந்தையிலும் சரி, நிர்வாக ரீதியாகவும் சரி அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல முக்கிய நிர்வாக முடிவுகளை எடுத்துள்ளது.

இதில் முக்கியமாக புதிய வர்த்தகத்தில் இறங்குவது, புதிதாக நிறுவனத்தை வாங்குவதில் நிதானத்தைக் கடைப்பிடித்தல், ஒட்டுமொத்தமாக Core வர்த்தகத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நிலைமையைச் சரி செய்தல் போன்ற முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. இதில் புதிய முதலீடுகளைக் குறைத்தது மட்டும் அல்லாமல் ஏற்கனவே இயங்கிவரும் சில சிறிய அளவிலான மற்றும் CORE பிரிவில் இல்லாத வர்த்தகத்தை விற்பனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

Adani Capital விற்பனை.. கௌதம் அதானி திடீர் முடிவு.. போட்டிப்போடும் பெரும் தலைகள்..!

இந்த சூழ்நிலையில் கோர் வர்த்தகத்திற்கு நிதி திரட்டும் வகையில் கௌதம் அதானி 6 வருடமாக இயங்கி வரும் அதானி கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அதானி கேப்பிடல் நிறுவனம் இந்தியா முழுவதும் விவசாய உபகரணங்கள் கடன், வர்த்தக வாகனங்கள் கடன், பிஸ்னஸ் லோன், சப்ளை செயின் பிரிவுக்கான கடன்களை வழங்கி வருகிறது.

அதானி கேப்பிடல் நிறுவனத்தில் சுமார் 90 சதவீத பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ளது, 10 சதவீத பங்குகளை முதலீட்டு வங்கியாளரும்,அதானி கேப்பிடல்-ன் சிஇஓ ஆன கௌரவ் குப்தா வைத்துள்ளார். 2016ல் இருந்து கௌரவ் குப்தா அதானி குழுமத்தில் பணியாற்றி வருகிறார், தற்போது அதானி கேப்பிடல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய தயாராகியுள்ளது அதானி குழுமம்.

இந்த நிலையில் அதானி கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றப் பிரபல தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பெயின் கேப்பிடல், கார்லைல் குரூப், Cerberus Capital Management ஆகிய 3 நிறுவனங்கள் BIDDING செய்யத் தயாராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதானி கேப்பிடல் நிறுவனத்தின் மொத்த AUM அதாவது இந்நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் சொத்துக்கள் அளவு 4000 கோடி ரூபாயாகும், இதன் புத்தக மதிப்பு 800 கோடி ரூபாய். தற்போது அதானி குழுமம் தனது புத்தக மதிப்பில் 2 - 2.5 மடங்கு அதிக மதிப்பீட்டை அதாவது 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டுக்கு அதானி கேப்பிடல் நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி கேப்பிடல் 2024 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு இருந்தது. 2 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 1500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நேரத்தில் தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின் அறிக்கை வெளியானது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+