இந்தியாவில் முகேஷ் அம்பானிக்குப் போட்டியாகப் பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக வளர்ந்து வரும் கௌதம் அதானி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், புதிதாக நிறுவனம் மற்றும் வர்த்தகத்தைக் கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இப்புதிய பணிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை உருவாக்குவதற்காகப் புதிய முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்தியாவில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவிலான விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானி, டாடா, பிராமல், பூனவாலா, ஓலா என அடுக்கிக்கொண்ட போகலாம்.
கௌதம் அதானி
இந்நிலையில் இந்தியாவின் 2வது பணக்காரரான கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி எண்டர்பிரைசர்ஸ் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகப் புதிதாக 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்ட திட்டமிட்டு உள்ளார்.
எண்டர்பிரைசர்ஸ்
இதற்காகக் கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிர்வாகம் உலகின் முன்னணி சவ்ரின் மற்றும் வெல்த் பண்ட் நிறுவனங்களிடமும், எனர்ஜி நிறுவனங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
தற்போது அதானி எண்டர்பிரைசர்ஸ் அபுதாபி இண்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, கத்தார் இண்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, பிஎன்பி பரிபாஸ், டோட்டல் எனர்ஜீஸ் ஆகிய நிறுவனங்களிடம் சுமார் 2 பில்லியன் வரையிலான முதலீட்டைப் பங்கு விற்பனை மூலம் திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இலக்கு
இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய எனர்ஜி மற்றும் வர்த்தக நிறுவனமான அதானி குழுமம் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்குகள் 9.61 சதவீதம் சரிந்து 1,417.75 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications