உலகளவில் பேசப்பட்ட இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆன கெளதம் அதானியின் இன்றைய நிலை, மிக கவலையளிக்கும் ஒன்றாகவே உள்ளது எனலாம்.
குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு அதானியின் மிகப்பெரிய கனவுகளாக பார்க்கப்பட்ட திட்டங்கள் என்னவாகுமோ? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து ஹிண்டர்ன்பர்க்கின் ஆய்வறிக்கையின் பிறகு, அதானி குழுமம் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது.
அதானி குழுமத்தின் மதிப்பு சரிவு
வருட தொடக்கத்தில் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த கெளதம் அதானி, இன்று 20வது இடத்திற்கு கீழாக பின் தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது 125 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு பெரும் சரிவினைக் கண்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே பல்வேறு புதிய புதிய துறைகளில் வணிகத்தினை மேற்கொண்டு வரும் அதானி, அதனை தொடர்ந்து விரிவாக்கமும் செய்து வந்தார். ஆனால் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு இனி என்னவாகுமோ என்ற கேள்வியும் எழுந்தது.
பெட்ரோ கெமிக்கல் துறையில் அதானி நிலைப்பாடு
இந்த நிலையில் புதிய துறைகளை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, ஏற்கனவே இருக்கும் பெட்ரோ கெமிக்கல் துறைகளில் இருந்து பின் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின.
குறிப்பாக அதானி குழுமம் குஜராத்தில் உள்ள முந்த்ராவில் 34,900 கோடி ரூபாய் மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை இடை நிறுத்தம் செய்துள்ளது. ஆக இதுவே பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
கவனம் செலுத்தலாம்
ஆனால் இதற்கு மாறாக மின்சார உற்பத்தி, துறைமுக சேவை மற்றும் புதிய பசுமை எரிசக்தி துறை என பலவற்றிலும் அதானி கவனம் செலுத்த தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அலுமினியம், ஸ்டீல் மற்றும் பல்வேறு சாலை திட்டங்களையும் கவனத்தில் கொள்ளலாம் என சந்தை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மாறுபட்ட அணுகுமுறை
பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தாலும் அதானி தொடர்ந்து முன்னேறி செல்ல விரும்புகிறார். ஆக அவரின் அணுகுமுறை என்பது இனி மாறுபட்ட பாணியில் இருக்கலாம்.
இது ஏற்கனவே 2.15 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனை செலுத்தி விட்டதாக கூறப்படும் நிலையில், பல புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக என்ன செய்ய போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் பங்கின் மூலம் பிணையமாக பெறும் நிதியினை தவிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு திரட்டலாம்
பங்குகள் விற்பனை, பத்திரங்கள் மூலம் திரட்டல் உள்ளிட்ட பலவற்றை பற்றி அதானி யோசிக்கலாம். குறிப்பாக சமீபத்தில் அதானி குழுமத்தில் முதலீடு செய்த GQG பார்ட்னர்ஸ் மீண்டும் முதலீடு செய்யவும் தயாராக இருப்பதாக கூறியது. ஆக இதுபோன்ற முதலீடுகளில் அதானி குழுமம் கவனம் செலுத்தலாம். இதன் மூலம் சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கங்களை சரிகட்ட நினைக்கலாம். எப்படியிருப்பினும் பிரச்சனைகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர அதானி குழுமம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications