இந்தியாவின் 2வது பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானி தொடர்ந்து தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்குப் பின் மத்திய அரசு நாட்டின் உள்கட்டுமானத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
கட்டுமானம் திட்டங்களை விரிவாக்குவதன் மூலம் அதிகளவிலான வேவைவாய்ப்பு, பல துறைகளுக்கு வர்த்தகம், பணப்புழக்கத்தைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும். இதன் அடிப்படையில் தான் மத்திய அரசு கட்டுமானம் மற்றும் இன்பரா துறையில் பெரிய அளவில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட்
இந்நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மத்திய அரசின் கட்டுமான திட்டங்கள் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு, இத்துறைக்குத் தொடர்புடைய வர்த்தகத்தில் இறங்கியுள்ளது. ஆம் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் கீழ் புதிதாக அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் என்னும் புதிய நிறுவனத்தைத் துவங்கியுள்ளது.
சிமெண்ட் தயாரிப்பு
இந்த நிறுவனத்தின் கீழ் வர்த்தகச் சந்தைக்குத் தேவையான அனைத்து விதமான சிமெண்ட்-களையும் தயாரித்து உற்பத்தி செய்து விற்பனை சந்தைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் சிமெண்ட் துறையில் ஏற்கனவே இருக்கும் பல நிறுவனங்களுக்குப் போட்டியாக மாற உள்ளது அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட்.
நிறுவன கைப்பற்றல்
அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்யவும், குறைந்த காலகட்டத்தில் வர்த்தகத்தை அதிகரிக்கவும் ஏற்கனவே சந்தையில் இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்ற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
மும்பை பங்குச்சந்தைக்கு
இதுக்குறித்து மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அதானி எண்டர்பிரைசர்ஸ் கீழ் 100 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற கிளை நிறுவனத்தை உருவாக்கியுள்ளதாகவும், விரைவில் இந்த நிறுவனத்தில் வர்த்தகத்தைத் துவங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
10 லட்சம் ரூபாய் முதலீடு
குஜராத் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ள இந்த அதானி சிமெண்ட் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தை 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. அதானி எண்டர்பிரைசர்ஸ் சில மாதங்களுக்கு ஒரு புதிய நிறுவனத்தைத் துவங்கியது.
முந்திரா பெட்ரோகெம் லிமிடெட்
அதானி குழுமம் ஏப்ரல் மாதத்தில் Mundra Petrochem Ltd என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கியது. இந்த நிறுவனத்தின் கீழ் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் கெமிக்கல் ஆலைகள் அடிப்படையிலான feedstocks அமைக்க உள்ளது. இதன் மூலம் நிலக்கரி, பெட்கோக், கோக், லைம்ஸ்டோன், சால்ட், மணல், தார், ஆயில், எல்பிஜி, எல்என்ஜி, ஈதேன், கிரீன் எரிபொருள் என அனைத்தையும் விநியோகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications