ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான பின்பு அதானி குழுமம் புதிய முதலீடுகளையும், புதிய கடன்களையும் பெறுவதில் அதிகளவிலான தடுமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் இன்வெஸ்டார் ரோட்ஷோ நடத்தி வருகிறது அதானி குழுமம், ஆனாலூம் பலன் அளிக்கவில்லை.
இந்த நிலையில் அதானி குழுமம் தனது புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, தற்போது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களில் தனது வர்த்தகத்திற்கு தொடர்பு இல்லாமல் இருக்கும் NON CORE ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தையை துவங்கியுள்ள கௌதம் அதானியின் அதானி குழுமம் ஒரு சில ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்பனை செய்து புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களில் தான் முதலீடு செய்ய உள்ளது, இதனால் வர்த்தகத்தில் எவ்விதமான புதிய மாற்றங்களும் இருக்காது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி மும்பையில் மிகவும் பிரபலமாக இருக்கும் பந்தரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில் அதானி ரியாலிட்டி நிறுவனத்திற்கு சொந்தமான Inspire BKC பகுதியை மொத்தமாக 650 கோடி ரூபாய் மதிப்பீட்டுக்கு விற்பனை செய்ய ப்ரூக்பீல்டு அசட் மேனேஜ்மென்ட் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Inspire BKC என்பது சுமார் 800000 சதுரடி கொண்ட பிரம்மாண்ட அலுவலக கட்டடமாகும். தற்போது இந்த அலுவலகங்களில் Novartis, Reliance Nippon Life Insurance மற்றும் MUFG Bank போன்ற பல முன்னணி நிறுவனங்கள் குத்தகைக்கு உள்ளது. 800000 சதுரடிக்கும் தற்போது குத்தகைதாரர்கள் உள்ளனர்.
இதேபோல் கௌதம் அதானியின் அதானி குழுமம் கடந்த ஆண்டு கைபற்றிய ACC நிறுனக்திற்கு சொந்தமாக 16 ஏக்கர் நிலம் மும்பை-க்கு அருகில் உள்ள தானே-வில் சுமார் 16 ஏக்கர் நிலம் உள்ளது. இதையும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் அதானி குழும நிறுவன பங்குகள் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு அதானி குழுமம் மீது வைத்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு, இந்த விசாரணை பரபரப்பாக நடந்து வந்தாலும் இதுவரையில் அதானி குழுமத்திற்கு எதிராக எவ்விதமான ஆதாரமும் திரட்டப்படவில்லை என சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications