அதானி குழுமம் மார்ச் காலாண்டில் குறைந்தது 3 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பிச் செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை அதானி குழுமம் அறிவித்துள்ளதா..? முதலீட்டாளர்கள் தெரிந்துக்கொள்வது என்ன..?
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு சுமாப் 145 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற பல முயற்சிகளை செய்து வருவதோடு வெளிநாட்டின் முன்னணி நிறுவனங்களிடம் புதிய முதலீடுகளை பெற பெரும் முதலீட்டு நிறுவனங்களிடமும், பல்வேறு தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மார்ச் மாதம் அதானி குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களான பிளாக்ராக், பிளாக்ஸ்டோன், பிசிபிக் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களை இந்நிறுவனத்தின் ப்ரைவேட் பாண்ட் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து அதற்கான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளது.
இந்த முதலீடுகளை பெற வேண்டுமெனில் அதானி குழுமம் தனது கடன் அளவை குறைத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்த கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப் நிர்வாகம் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த சில நாளில் இருந்த கடனை குறைப்பதற்கான பணியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குரூப் பங்குகளை அடமானமாக வைத்து வாங்கி கடன்களையும், பத்திரங்கள் வாயிலாக பெற்ற கடன் முன்கூட்டியே தெலுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்களுக்கு அதானி குரூப் மீதான அச்சத்தை போக்கவும், நம்பிக்கை அளிக்கவும் மூன்று உள்நாட்டு மியூச்சவல் பண்ட் முதல் பத்திரங்கள், பங்குகள் மீதான 3 பில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே மார்ச் காலாண்டில் அதானி குரூப் நிர்வாகம் செலுத்தியுள்ளதாக லைவ்மின்ட் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதானி குரூப் GQG பார்ட்னர்ஸ் மூலம் பெற்ற 1.88 பில்லியன் டாலர் ஈக்விட்டி நிதியுதவி மற்றும் ப்ரோமோட்டர் குரூப் குழு நிதியிலிருந்து 1 பில்லியன் டாலர் நிதி ஆகியவற்றை கொண்டு பங்குகள், பத்திரங்கள் மீதான கடனுக்கு முன்கூட்டியே திருப்பிச் செலுத்து பயன்படுத்தப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன் லிமிடெட் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் ஆகிய 4 அதானி குழும நிறுவனங்களில் ப்ரோமோட்டர்கள் தங்களை கடனை குறைக்க குறைந்த பட்சம் 2.54 பில்லியன் டாலர் செலவழித்துள்ளதாக கடந்த வாரம் ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications