அதானி குழுமத்தின் தலைவரான கெளதம் அதானி மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் அதானி, தங்கள் வசம் உள்ள அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கினை குறைத்துள்ளனர்.
இது குறித்து வெளியான அறிக்கையின் படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3.39% பங்கினை குறைத்து, 69.23% ஆக குறைத்துள்ளனர்.
இது அமெரிக்காவின் தலைமையிடமாகக் கொண்ட GQG பார்ட்னர்ஸ், அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களின் 15,446 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக அதானி குழுமம் அறிவித்த ஒரு நாளுக்கு பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதானி டிரான்ஸ்மிஷன்
அவர்கள் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திலும் தங்கள் பங்குகளை 2.55% குறைத்து, 71.65% பங்கினை குறைத்துள்ளனர். அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் சுமத்திய குற்றச்சாட்டின் மத்தியில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் இன்று 17.5% ஏற்றம் கண்டுள்ளது. இதே அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 10% ஏற்றத்திலும், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் முறையே 5% ஏற்றம் கண்டுள்ளன.
எவ்வளவு அதிகரிப்பு?
அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களின் சந்தை மூலதனம் என்பது கடந்த 4 அமர்வுகளில் 1.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மார்ச் 3 வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
பிப்ரவரி 27 அன்று 6.82 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பானது, மார்ச் 3 அன்று 8.55 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பல்வேறு மோசடி
அதானி குழுமம் மோசடி செய்து பங்குகளை உயர்த்தி காட்ட பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டதாக, ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது சுட்டிக் காட்டிய நிலையில், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பானது கடும் சரிவினைக் கண்டது. இதற்கிடையில் அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு வெளியீட்டினையே தடை செய்தது.
பங்குகள் விற்பனை?
இதற்கிடையில் அதானி குழுமத்தின் 4 நிறுவனங்களின் 21 கோடி பங்கினை விற்பனை செய்துள்ளது. இதில் ஓபன் மார்கெட் மூலம் அதானி டிரான்ஸ்மிஷனின் 2.84 கோடி பங்கினை GQG பார்ட்னர்ஸ் வாங்கியுள்ளது. இதன் ஒரு பங்கின் விலை 668.4 ரூபாய் என்ற விலையில், 1898 கோடி ரூபாய்க்கும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3.87 கோடி பங்குகள், 1410.86 ரூபாய் என, 5460 கோடி ரூபாயும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் 8.86 கோடி பங்குகள், 596.2 கோடி ரூபாயும்,அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 504.60 ரூபாய் எனும் வீதம், 2806 கோடி ரூபாயினையும் 5.56 கோடி பங்குகளை விற்பனை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
அதானி குழுமத்தின் மீதான இந்த நடவடிக்கைக்கு மத்தியில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. ஆக இதுவும் சந்தை ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்.
எனினும் 2 மாதத்தில் உண்மை என்ன? என்பது தெரியவரும். அப்போது சந்தையில் முழு தாக்கமும் இருக்கலாம்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications