அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்தன. இதில் அதானியின் சகோதரரான வினோத் அதானியும், அதானி குழும மோசடிகளில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டது.
குறிப்பாக போலியான நிறுவனங்கள் பெயரில் அதானிக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையில் அதானி குழுமத்திற்கு சொந்தமானதாக கூறப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் மற்று ஏச்சி நிறுவனங்கள், கெளதம் அதானிக்கு சொந்தமானது அல்ல என்று கூறப்படுகிறது.
சிமெண்ட் உற்பத்தியாளர்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அதானி குழுமம் சுவிஸ் சிமெண்ட் நிறுவனமான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி சிமெண்டுகளை 10.5 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராகவும் உருவெடுத்தது என கூறப்பட்டது.
வினோத் அதானிக்கு சொந்தம்
ஆனால் தற்போது இந்த நிறுவனம் மொரிஷியஸில் உள்ளதாகவும், இது வினோத் அதானிக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகின்றது. மேலும் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட அதானி எண்டர்பிரைசஸ் உள்பட எந்த நிறுவனங்களும் இதனை வாங்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஆனால் அதானி குழுமமோ மிகப்பெரிய பங்குகளை கொண்டுள்ளதாக ஒரு அறிவிப்பினை முன் வைத்தது.
மேலும் சரியலாம்
மொத்தத்தில் ஏற்கனவே ஹிண்டர்ன்பர்க் அறிக்கையால் குழப்பத்தில் உள்ள முதலீட்டாளர்களும், பங்குதாரர்களும், தற்போது இந்த அறிவிப்பால் இன்னும் குழப்பத்தில் உள்ளனர் எனலாம். ஆக இது மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது உண்மை தானோ என எண்ணத் தோன்றிவிட்டது எனலாம். இது மேற்கொண்டு அதானி குழும பங்குகள் சரிவுக்கு வழிவகுக்கலாம்.
எந்த பங்கும் இல்லை
அதானி குழுமப் பங்குகளில் குழப்பத்தை ஏற்படுத்திய ஹிண்டர்ன்பர்க் அறிக்கை, கெளதம் அதானிக்காக பல ஷெல் நிறுவனங்களை நிர்வகிப்பதாக சுட்டிக் காட்டியது. ஆனால் இதற்கும் வினோத் அதானிக்கும் எந்த பங்கும் இல்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு கூட அதானி குழுமம், அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி-யில் உள்ள பங்கினை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இனி என்னவாகும்?
எனினும் இந்த அறிவிப்பினை அதானி குழுமம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனலாம். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இனியும் அதானி குழும பங்குகள் என்னவாகும், அதானி குழும முதலீட்டாளர்களின் நிலை என்ன? என பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
எது உண்மை?
ஹோல்சிம் உடனான ஒப்பந்தத்தினை பகிர்ந்து கொண்ட அதானி குழுமம், 14 சர்வதேச வங்கிகளில் இருந்து 4.50 பில்லியன் டாலர் நிதியினை திரட்டியதாகவும் கூறியது.
அதே போல அதானி குழுமத்திலோ அல்லது அதானி குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களிலோ, எந்த நிர்வாக பதவியையும் வகிக்கவில்லை என்றும் அவர்கள் எந்த விவகாரங்களிலும் பங்கு வகிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. மொத்தத்தில் எது உண்மை எது பொய் என்பது குறித்து அதானி குழுமம் வாய் திறந்தால் மட்டுமே அது முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications