அதானி குழுமம் என்பது கடந்த சில வாரங்களாகவே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை என்பது சற்றே குறைந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் மட்டுமே, கடும் சரிவினை கண்டு வருவதை பார்க்க முடிகிறது.
ஆனால் மக்கள் அறியாத பல நிறுவனங்கள் உள்ளது பற்றிய பலவாறான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிணையமாக வைத்து கடன்
அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் சர்ச்சைக்கு மத்தியில், அதானி குழுமம் பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை பிணையமாக வைத்து கடன் வாங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதன் மூலம் அதானி குழுமம் அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது நிறுவனங்களின் வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும் செய்யப்பட்டதாக நிறுவனம் தரப்பில் விளக்கமும் கொடுக்கப்பட்டது.
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பலன்
கெளதம் அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மூலம் திரட்டப்படும் நிதியானது, பெரியளவில் இதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், இது குறித்தான விவரங்கள் எதுவும் முழுமையாக வெளியாகவில்லை.
பொதுவாக இந்திய நிறுவனங்கள் பலவும் இதுபோன்று பங்குகளை பிணையமாக வைத்து, அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கோ அல்லது விரிவாக்கத்திற்கோ பயன்படுத்துகின்றன.
அதானி ப்ராபர்டீஸ்
அந்த வகையில் அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை விட, பட்டியலிடப்படாத நிறுவனங்களே அதிகம் எனலாம். இதில் அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட அதானி ப்ராபர்டீஸ் நிறுவனமும் அடங்கும். இந்த நிறுவனத்திலும் அதானி குழுமம் கணிசமான முதலீட்டினை செய்துள்ளது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள்
மூன்று தசாப்தங்கள் பழமையான இந்த நிறுவனத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்னணி நிறுவனங்களாக அறியப்படுகின்றன.
பட்டியலிடப்படாத நிறுவனங்கள்
எனினும் சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனங்களின் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 11,144 கோடி ரூபாயாக உள்ளது. இதே இதன் வரிக்கு பிந்தைய லாபம் என்பது 2020 - 21ல் 4763 கோடி ரூபாயாக இருந்தது. இதன் கடன் விகிதமானது 28,618 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நெட்வொர்த் மதிப்பு 47,293 கோடி ரூபாயாகவும் உள்ளது. இந்த நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது 2020 - 21ல் 74,499 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இவ்வளவு நிறுவனங்களா?
அதானி குழுமத்தில் சுமார் 351 துணை நிறுவனங்கள் உள்ளதாகவும், இவை இணை நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
சொத்து பட்டியலில் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் 8.21 லட்சம் சதுர அடி நிலமும் அடங்கும். எனினும் இந்த சொத்துக்கு எதிராகவும் நிறுவனம் கடனை பெற்றுள்ளது. குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் அதானி குழுமத்தின் சொத்துகள் உள்ளன.
இவ்வளவு முதலீட்டாளர்களா?
சமீபத்தில் அதானி குழுமம் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது அதானி ப்ராப்பர்டீஸ் நிறுவனம். இந்த நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்படவில்லை என்றாலும், உலகளாவிய அளவில் முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளது எனலாம். இந்த நிறுவனத்தில் கிரெடிட் சூசி, பார்க்லேஸ், மெர்சண்ட் வங்கி, காப்தால் மொரிஷியஸ், டிபி இண்டர் நேஷனல் கடன் பத்திரங்கள் மூலம் முதலீடு செய்துள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications