அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி-யின் இளைய மகன் ஜீத் அதானி-க்கும் வைர வியாபாரியின் மகளான திவா ஜெய்மின் ஷா-வுக்கும் மார்ச் 12 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சி.தினேஷ் & கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல வைர வியாபாரியுமான ஜெய்மின் ஷாவின் மகள் தான் திவா ஜெய்மின் ஷா.
ஜீத் அதானி
ஜீத் அதானி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மற்றும் அப்ளைய்டு சையின்ஸ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். ஜீத் அதானி 2019 இல் அதானி குழும பணியில் சேர்ந்து, தற்போது அதானி குழுமத்தின் நிதி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார்.
அதானி டிஜிட்டல் லேப்ஸ்
அதானி குழுமத்தின் இணையதள தரவுகள் படி அதானி ஏர்போர்ட்ஸ் வணிகத்தையும், அதானி டிஜிட்டல் லேப்ஸ் இணைந்து அதானி குழும வணிகங்களின் அனைத்து வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வகையில் ஒரு சூப்பர்ஆப் உருவாக்கி வருகிறது. இந்த முக்கியமான திட்டத்திற்கு ஜீத் அதானி தலைமை தாங்குகிறார்.
கரண் அதானி
கௌதம் அதானியின் மூத்த மகன் கரண், சட்ட நிறுவனமான சிரில் அமர்சந்த் மங்கள்தாஸின் நிர்வாகப் பங்குதாரரான சிரில் ஷ்ராப்பின் மகள் பரிதி ஷ்ராப்பை மணந்தார். கரண் அதானி அதானி போர்ட்ஸ் & SEX லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் இயக்குநராக உள்ளார்.
ஆனந்த் அம்பானி
முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் என்கோர் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்சன்ட்-ன் மகளான ராதிகா மெர்சண்ட்-ன் ரோகா விழா டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இரு குடும்பத்தின் முன்னிலையில் நடந்தது.
இதை தொடர்ந்து மும்பை அன்டிலியா வீட்டில் குஜராத் முறைப்படி நிச்சியதார்த்தம் நடந்தது மறக்க முடியாது.
வைர வியாபாரி - முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் மனைவியான ஸ்லோகா மேத்தா திருமணத்தை இந்தியாவே திரும்பி பார்த்தது என்றால் மிகையில்லை. ஆகாஷ் அம்பானி பல ஆண்டுகளாக ஸ்லோகா மேத்தா-வை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். வைர வியாபாரி ரசல் மேத்தாவின் மகள் தான் ஸ்லோகா மேத்தா அம்பானி.
இதன் மூலம் அதானி வீட்டிலும் ஒரு வைர வியாபாரி சம்மந்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications