இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனராக இருந்த மின்சாரம் தொடங்கி கப்பல் வரையிலான வணிகங்களில் கொடி கட்டி பறக்கும், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் நிகரமதிப்பானது பிப்ரவரி 20 நிலவரப்படி 50 பில்லியன் டாலர்களுக்கும் குறைவாக உள்ளது.
ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் அறிக்கையின் படி, கெளதம் அதானியின் நிகர மதிப்பானது 49.1 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இவர் தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் 25வது இடத்தில் உள்ளார்.
இதேபோல போர்ப்ஸ் ரியல் டைம் அறிக்கையின் படி, அதானியின் நிகர சொத்து மதிப்பு 47.6 பில்லியன் டாலராக குறிப்பிட்டுள்ள நிலையில், இவர் 25வது இடத்தில் உள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது.
அம்பானியின் நிலவரம் என்ன?
இதற்கிடையில் இந்தியாவின் இரு பெரும் பில்லியனர்களான கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கும் இடையேயான இடைவெளி என்பது தொடர்ந்து பெரியளவில் அதிகரித்துள்ளது.
முகேஷ் அம்பானி தற்போது சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு 83.6 பில்லியன் டாலராக உள்ளது என ப்ளூம் பில்லியனர் இன்டெக்ஸ் அறிவித்துள்ளது. இதே போர்ப்ஸ் அறிக்கையின் படி அவரின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டாலராகவும் கணித்துள்ளது. எனினும் அம்பானி 8வது இடத்தில் உள்ளார்.
அதானி குழும பங்குகளின் நிலை
அதானி குழுமத்தினை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்குகள் அதனதன் 52 வார உச்சத்தினை எட்ட 410% வரையில் அதிகரிக்க வேண்டும். அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் ஒரு பங்குக்கு 606.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே அதானி டோட்டல் கேஸ் பங்கின் விலையானது 925.10 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
அதானி எண்டர்பிரைசஸ் FPO ரத்து?
இதே அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது முறையே, 873.90 ரூபாயாகவும், இதே 1623.65 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லரான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி குழுமத்தினை சேர்ந்த நிறுவனம் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான அதன் உரிமை பங்கு வெளியீட்டினையே ரத்து செய்தது.
அதானி பங்குகள் சரிவு
எனினும் இன்றுவரையில் அதானி குழுமத்தின் சில பங்குகள் சரிவினையே கண்டு வருகின்றன. அதானி குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையினை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பல்வேறு விதமாக அறிவிப்புகள் அதானி குழுமத்திற்கு எதிராக வந்துள்ளது. அதானி குழுமமும் நம்பிக்கையை மீட்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பல்வேறு நடவடிக்கைகள்
குறிப்பாக அதானி குழுமமும் தற்போது செலவு குறைப்பு நடவடிக்கை, கடனை திருப்பி செலுத்துவது என பலவற்றில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. மேலும் பங்கு சந்தையில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியிலும், அதனை மீட்கும் திட்டத்தினையும் வகுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
மொத்தத்தில் இழந்த நம்பிக்கையை மீட்டு முதலீட்டாளர்களுக்கு பழைய நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கிய வேலையாகவும் பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பாதிப்பு இருக்காது
இதற்கிடையில் அதானி குழுமத்தின் மீதான பிரச்சனையானது இந்தியாவினை பாதிக்கும் என்பது முட்டாள்தனமான ஒன்று என டிஎல் எஃப்-ன் தலைவர் கூறியுள்ளார்.
இதே ஜிண்டால் கூறுகையில் இந்தியா மிகப்பெரிய நாடு. ஆக இந்த கதை விரைவில் அழிந்துவிடும். முதலீடுகளில் பாதிப்பு இருக்காது என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications