கொரோனா வைரஸால் பொருளாதாரம் என்ன ஆகுமோ என எல்லோரும் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பிறகான காலம், எப்படி இருக்கும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறது உலகம்.
ஆனால் தொழிலதிபர் கெளதம் அதானி, கொரோனாவுக்கு பிறகான உலகம் குறித்து நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
போஸ்ட்
லிங்க்ட் இன் (Linked In) தளத்தில் , அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். ‘How COVID-19 helped rediscover hope and goodness'. என்கிற தலைப்பில் கொரோனா வைரஸ் பற்றி எழுதி இருக்கிறார்.
கீழே இழுக்காது
கொரோனா வைரஸுக்குப் பிறகான உலகம், எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும், அது என்னை கீழே இழுக்காது. அதற்கு பதிலாக, என்னைச் சுற்றிப் பார்க்கும் போது, நாம் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை கொடுக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் கெளதம் அதானி.
கொரோனாவால் முடியாது
கொரோனா வைரஸால், நம் நடமாட்டத்தைத் தான் தடுக்க முடியும், நாம் போராடுவதையும், ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதையும் தடுக்க முடியாது. கொரோனாவால் நம் எதிர்காலத்தைக் குறித்து பாசிட்டிவ்வாக இருப்பதை தடுக்க முடியாது. நாம் பலமாகவும் நம்பிக்கையோடும் இருப்போம் எனச் சொல்லி இருக்கிறார் அதானி.
நம்பிக்கை வெளிச்சம்
MyLab Discovery Solutions என்கிற ஸ்டார்ட் அப் கம்பெனி தான் இந்தியாவிலேயே, கொரோனா சோதனை கிட்களை முதன் முதலில் கண்டு பிடித்தது. அதில் முக்கிய பங்காற்றியவர் மினால் போன்சலே என்கிற வைராலஜிஸ்ட். குழந்தை பிறப்பதற்கு ஒரு சில நாட்கள் முன்பு வரை உழைத்து இந்த கிட்டைக் கண்டு பிடித்தார். இப்படி பல நம்பிக்கை தரக்கூடிய விஷயங்கள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன.
மக்கள் அக்கறை
சில குடும்பங்கள், ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை திரட்டிக் கொடுப்பதில் தங்கள் லாக் டவுன் காலத்தை செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நவீன் என்கிற அரசு அதிகாரி, சித்ர துர்கா என்கிற கர்நாடக பகுதியில் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை பிரமாதமாக ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
ஒரு வாய்ப்பு
இந்த நல்ல எண்ணங்களும் அன்பும் ஒரே நாளில் திடீரென வந்துவிடவில்லை. இவைகள் எல்லாமே நமக்குள் எப்போதும் இருந்து இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் இந்த எண்ணங்கள் மற்றும் அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைக் கொடுத்து இருக்கிறது என மிக நம்பிக்கையாகச் சொல்லி இருக்கிறார் கெளதம் அதானி. கொரோனா ஒழியட்டும், எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பட்டும்.


Click it and Unblock the Notifications