இந்தியாவில் அம்பானி குடும்பத்திற்கு பிறகு மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமாக வளர்ந்து நிற்கிறது அதானி குழுமம்.
இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார் கௌதம் அதானி. ப்ளூம்பெர்க் தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 106 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயின் மதிப்பில் இது சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் செயல்படுகிறது. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் கௌதம் அதானி எவ்வளவு ஊதியம் பெறுகிறார், என்பன உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 2024ஆம் நிதியாண்டுக்கான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை வெளியாகியுள்ளது.
இதில் யாருக்கெல்லாம் எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி அதானி எண்டர்பிரைசஸ் தலைவரான கௌதம் அதானி 2024ஆம் நிதியாண்டில் 2.46 கோடி ரூபாயை மட்டுமே ஊதியமாக பெற்றுள்ளார்.
இது கடந்த ஆண்டு பெற்ற ஊதியத்தை விட 3 சதவீதம் அதிகம். 2023 ஆம் நிதியாண்டில் 2.39 கோடி ரூபாயை ஊதியமாக பெற்ற கௌதம் அதானி அதை விட 3 சதவிகிதம் கூடுதலாக 2.46 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றுள்ளார். இதில் 27 லட்சம் ரூபாய் அவருக்கான அலோவென்ஸ் மற்றும் பிற பலன்களாக வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் அதானி எண்டர்பிரைசஸில் அதிக ஊதியம் பெற்ற பெரும் நபர் என்ற பெயர்கூட கெளதம் அதானிக்கு இல்லை. ஏனெனில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அதிக ஊதியம் பெறக்கூடிய நபராக வினய் பிரகாஷ் என்பவர் இருக்கிறார். அதானி எண்டர்பிரைசஸின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் வினய் பிரகாஷ்.
2024ஆம் நிதியாண்டில் இவரது மொத்த ஊதியம் 89.37 கோடி ரூபாய் ஆகும். இதில் வினய் பிரகாஷின் ஊதியம் 2.54 கோடி தான் ஆனால் அவருக்கு அலோவென்ஸ் மற்றும் பிற பலன்களாக கிடைத்த தொகை மட்டும் 86.83 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
வினய் பிரகாஷின் நிர்வாக திறமையால் அதானி எண்டர்பிரைசஸ் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளதால் இவருக்கு ஊக்கத்தொகையாக மட்டுமே பல கோடி ரூபாயை வழங்கியதாக அதானி குழுமம் கூறியுள்ளது.
அதே வேளையில் கௌதம் அதானின் இளைய சகோதரரான ராஜேஷ் அதானி 8.37 கோடி ரூபாய் சம்பளத்தையும் , மற்றொரு சகோதரரான பிரணவ் அதானி 6.46 கோடி ரூபாய் சம்பளத்தையும் பெற்றுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications