இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கவுதம் அதானியின் வளர்ச்சிக்கு பின்னால், பிரதமர் மோடி இருப்பதாக பல விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் பரவலாக உண்டு.
எனினும் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரையில் அதானி வெளிப்படையாக மனம் திறந்து கூறியதில்லை.
இந்த குற்றச்சாட்டுகள் போலவே துறைமுகம், விமான நிலையங்கள், மின் உற்பத்தி என பல அரசு துறை சார்ந்த திட்டங்களில் பெரும்பாலும் அதானி இடம் பெற்றிருப்பார். அதில் பலவற்றிலும் அதானிக்கு சாதகமாகவே முடிவுகளும் இருக்கும். இதுவே இந்த விமர்சனங்களை இன்னும் அதிகமாக்கியது என்றும் கூட கூறலாம்.
வேகமாக வளர்ந்து வரும் பில்லியனர்
குஜராத் மாநிலத்தினை சேர்ந்தவரான அதானி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனர். உலக பில்லியனர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். அவரின் சொத்தின் மதிப்பு மதிப்பு மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. இது சர்வதேச பில்லியனர்களை காட்டிலும் அதிகம் என்பது தான் இன்னொரு ஹைலைட்.
நம்ப முடியாத உண்மை
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அதானி, தான் கடந்து வந்த சவாலான பாதை குறித்து பகிர்ந்துள்ளார். எனது தொழில் பயணத்தை 4 கட்டமாக பிரிக்கலாம். நான் சொல்வது நம்ப முடியாததாக இருக்கலாம். ஆனால் இது தான் உண்மை என கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில்
என தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் தான் காரணம். இருப்பினும் நான் அப்போது தொழிலதிபரான எனது வணிக பயணத்தை தொடங்கவில்லை. அது தான் முதல் படி.
அதன் பிறகு 1991-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் கொண்டு வந்த மிக முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பல தொழில்துறையினரும் பலன் அடைந்தனர். அதில் நானும் ஒருவன்.
குஜராத் முதல்வரும் ஒரு காரணம்
மூன்றாவது கட்டத்தினை 1995ல் எட்டினேன். இது அப்போதைய குஜராத் முதல்வரான கேஷுபாய் படேல் தான் காரணம். அவரின் தொலை நோக்கு பார்வை கொண்ட வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை கொண்டு வந்தார். இதில் முக்கியமானது கடலோர வளர்ச்சியும். இது தான் என்னை துறை முக நிறுவனத்தினை உருவாக்க தூண்டியது.
குஜராத் முதல்வராக மோடி காலம்
அதன் பிறகு 2001ல் அடுத்த கட்டத்தை எட்டினேன் அப்போது குஜராத் முதல்வராக பிரதமர் மோடி இருந்தார். அப்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழிற்துறை வளர்ச்சியானது இருந்தது. தற்போது அதேபோன்றதொரு வளர்ச்சியினை நாடு முழுவதும் கொண்டு வருவதை பார்க்கிறோம். இப்படியாக பல தலைவர்கள் பல அரசுகள் மற்றும் கொள்கைகள் எனது தொழில் வளர்ச்சியில் அடங்கியுள்ளது. ஆக எனது தொழில் வளர்ச்சியானது தனி ஒரு நபரை சார்ந்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
மோடி ஆட்சி
மேலும் நானும் பிரதமர் மோடியும் ஒரே மாநிலத்தை சார்ந்தவராக இருப்பதால் இந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆத்மா நிர்பார் மற்றும் டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பல திட்டங்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன. இதன் மூலம் நாட்டின் உற்பத்தியும் அதிகரிக்கும். வளர்ச்சியும் அதிகரிக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக நேரடியாகவும், மறைமுகமாகவும் மில்லியன்கணக்கானவர்கள் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். பிரதமர் மோடியின் மேற்கண்ட திட்டங்கள் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications