கௌதம் அதானி ஷாக்.. ஒரே நேரத்தில் 6 நோட்டீஸ்.. செபி அதிரடி..!

இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி-க்கு சொந்தமான அதானி குழுமம், ஹிண்டன்பர்க் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் சாதகமான அறிவிப்புகளை வெளியிட்ட பின்பு இக்குழும பங்குகள் தடாலடியாக உயர துவங்கியது. ஹிண்டன்பர்க் விவகாரம் இன்னும் முடியாத நிலையில் அதானி குழுமம் அடுத்தடுத்து கடன் வாங்கி, முதலீடு செய்து, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது.

இந்த நிலையில் அதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் இருந்து நேரில் வந்து ஆஜராகி விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் பதஞ்சலி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட show-cause notices பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கௌதம் அதானி ஷாக்.. ஒரே நேரத்தில் 6 நோட்டீஸ்.. செபி அதிரடி..!

அதானி குழுமம் இந்த ஷோகாஸ் நோட்டீஸ் குறித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அளித்த விளக்கத்தில், அதானி குழும நிறுவனங்கள் தொடர்புடைய தரப்புகளின் பரிவர்த்தனை விதி மீறல், பட்டியலிடும் விதிகளை மீறுதல் மற்றும் கடந்த காலத்தில் தணிக்கையாளர் சான்றிதழ்களின் வேலிடிட்டி ஆகிய குற்றங்களை சார்ந்தது என விளக்கம் கொடுத்துள்ளது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழும சாம்ராஜ்ஜியத்தின் முதலும் முக்கியமான நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், மார்ச் 31 முடிவடைந்த காலாண்டில் இரண்டு காரணங்களைக் காட்டி நோட்டீஸ்களைப் பெற்றதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும் அகமதாபாத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், அதானி பவர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி வில்மார் மற்றும் அதானி டோடல் கேஸ் ஆகிய நிறுவனங்களும் இந்த வாரம் செபி அனுப்பிய நோட்டீஸ்கள் குறித்து தகவல் தெரிவித்துள்ளன.

6 நோட்டீஸ் குறித்து அதானி குழுமம் கூறுகையில், தாங்கள் பெற்ற சட்ட ஆலோசனைப்படி, ஒழுங்குமுறை ஆணையத்தின் நோட்டீஸ்கள் நிறுவனங்களைப் பாதிக்க வாய்ப்பில்லை என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அதானி வில்மார் மற்றும் அதானி டோட்டல் கேஸ் தவிரப் பிற நிறுவனங்களின் கணக்குத் தணிக்கையாளர்கள், செபி-யின் விசாரணைக்குப் பின்பு தகுதி விளக்கத்தையும், கருத்துக்களையும் அளித்துள்ளனர். இதன் வாயிலாக எதிர்கால நிதி அறிக்கைகளை பாதிக்கக்கூடும் எனவும் அதானி குழுமத்தின் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை அடுத்துச் செபி இந்த விசாரணையை மேற்கொண்டது.

ஷோகாஸ் நோட்டீஸ் என்பது குற்றச்சாட்டு அல்ல. இது, விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது, ஏன் அபராதம் விதிக்கப்படக் கூடாது என்பதற்கான காரணங்களை நிறுவனத்திடம் விளக்கம் கேட்கும் முறை.

ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் செபி தாக்கல் செய்த அறிக்கையில், 13 அதானி குழுமத் தொடர்புடைய பரிவர்த்தனைகளை அடையாளம் கண்டு, அவற்றின் பின்னணியில் உள்ள ஒப்பந்தங்களை விசாரித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

ஜனவரி 2023 இல் வெளியான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, 6,000க்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளைக் குறிப்பிட்டு, அவற்றின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+