கௌதம் அதானி தலைமையிலான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், அதானி வில்மர் லிமிடெட் நிறுவனத்தில் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் 44% பங்குகளை முழுமையாக விற்பனை செய்துவிட்டு மொத்தமாக வெளியேற உள்ளதாகத் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இந்த வெளியேற்ற முடிவு இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இந்திய FMCG மற்றும் சமையல் எண்ணெய் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை அதானி வில்மர் வைத்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் மற்றும் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டணி நிறுவனமான அதானி வில்மர் லிமிடெட். 1999 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அதானி வில்மர் நிறுவனம் இந்தியாவில் 23 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியர்களுக்கு சமையலறை அன்றாட தேவைகளான சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை விற்பனை செய்கிறது.

இந்தியாவில் எப்எம்சிஜி பிரிவில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் இருந்தாலும், அதானி குழுமம் அடுத்தடுத்து எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளைக் குறைந்த வேகத்தில் வளர்ச்சி அடையும் எப்எம்சிஜி பிரிவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பு அதானி முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் அறிவிப்பின் படிமுதல் கட்டத்தில், அதானி என்டர்பிரைசஸின் முழுமையான துணை நிறுவனமான அதானி கம்மடிட்டிஸ் எல்எல்பி (ACL) வைத்திருக்கும் அதானி வில்மர் 31.06% பங்குகள் வரை வில்மர் இன்டர்நேஷனலின் முழுமையான துணை நிறுவனமான லென்ஸ் பிடிஈ லிமிடெட்டுக்கு விற்பனை செய்யப்படும்.
இதற்கிடையில், இந்திய பங்குச் சந்தை விதிமுறையின் படி குறைந்தபட்ச பொது பங்கு வைத்திருப்பு தேவைகளை பூர்த்தி செய்ய, அதானி என்டர்பிரைசஸ் அதானி வில்மாரில் தனது சுமார் 13% பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்யும்.
இந்த வெளியேற்றம் மூலம் கிடைக்கும் நிதியை அதானி என்டர்பிரைசஸ் முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் துறைகளில் முதலீட்டை செய்யும். விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை முக்கியமாக எனர்ஜி மற்றும் பயன்பாடுகள், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் மற்றும் பிற முக்கிய தொழில்துறை பிரிவுகளில் முதலீடு செய்து மேம்படுத்தும்.
இன்றைய வர்த்தக முடிவில் அதானி வில்மார் பங்குகளின் சந்தை மதிப்பு 42,785 கோடி ரூபாய், இதேபோல் அதானி எண்டர்பிரைசர்ஸ் பங்கு மதிப்பு 7 சதவீதம் உயர்ந்து 2,585 ரூபாயாக உள்ளது. மேலும் அதானி வில்மாரில் அதானி தனது பங்குகளை வில்மார் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது, ஆனால் இந்தியாவில் இனி தனி நிறுவனமாக இயங்குமா அல்லது கூட்டணியைச் சேர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications