சென்னை: இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானியின் அதானி குழுமம் சுமார் ரூ.4,200 கோடி திரட்டும் வகையில், பிப்ரவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அம்புஜா சிமெண்ட்ஸில் தனது 2.84% பங்கை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பங்குகளின் விற்பனைக்கு உதவும் வங்கி தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி குழும நிறுவனமான ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் சுமார் 69.96 மில்லியன் பங்குகளைப் பங்கு ஒன்றுக்கு ரூ.600 என்ற பேஸ் விலையில் விற்பனை செய்யும் என்று தெரிகிறது. இந்த பேஸ்விலை வியாழக்கிழமை வர்த்தகம் முடியும் விலையான ரூ.633 க்கு 5% குறைவான விலை அளவீடாகும்.

அம்புஜா சிமெண்ட்ஸின் பங்குகள், இந்த ஆண்டு இதுவரை 18% உயர்ந்துள்ளன, அதே சமயம் சென்செக்ஸ் 12% வளர்ச்சி அடைந்துள்ளது. அதானி குழுமம் தற்போது அம்புஜா சிமெண்ட்ஸில் 70.33% பங்கை வைத்துள்ளது, இதில் ஹோல்டெரிண்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 50.90% பங்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2023 அக்டோபர் முதல் அதானி குழுமம் வாரண்டுகள் மூலம் இந்த நிறுவனத்தில் சுமார் ரூ.20,000 கோடி முதலீடு செய்துள்ளது, இதன் மூலம் தங்கள் மொத்த பங்கை 70.33% ஆக அதிகரித்துள்ளது. இதில், ரூ.15,000 கோடி இந்த ஆண்டு முதலீடு செய்யப்பட்டது, அதே சமயம் ரூ.5,000 கோடி 2022 அக்டோபரில் முதலீடு செய்யப்பட்டது.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளரான அதானி சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி மற்றும் சங்கி இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது, இதன் மொத்த உற்பத்தி திறன் 78.9 மில்லியன் டன் ஆகும்.
ஜெஃபரிஸ் இந்தியா இந்த பிளாக் டீலுக்கான ஆலோசகராக உள்ளது, இந்க பிளாக் டீல் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும்.


Click it and Unblock the Notifications