இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான தொழிலதிபர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானி, பிரபல வைர வியாபாரி ஜெயின் ஷாவின் மகள் திவா ஜெயின் ஷாவுடன் இன்று திருமணம் செய்துகொண்டார். அகமதாபாத்தில் உள்ள அதானி
டவுன்ஷிப் நகரமான சாந்தி கிராமத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட மிகவும் ப்ரைவேட் ஆக இவர்களின் திருமணம் நடைபெற்றது.
இன்று மதியம் 2 மணி முதல் திருமணம் தொடர்பான சடங்குகள் துவங்கிய நிலையில் மாலையில் ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா-வின் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படத்தை கௌதம் அதானி அதிகாரப்பூர்வமாக சமூக ஊடகத்தின் வாயிலாக பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கௌதம் அதானி.

ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா இருவரும் தங்களுடைய திருமண விழாவை ஆரம்பரம் இல்லாமல் சிறிய அளவில் நடத்த விரும்பியதாகவும், இதனால் பலரையும் அழைக்க முடியவில்லை என்றும், இதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கௌதம் அதானி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார். ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா-வின் திருமணம் ஜெயின் மற்றும் குஜராத்தி முறைப்படி இன்று மதியம் 2 மணிக்கு முதல் நடைபெற்று வருகிறது.
மகனின் திருமணத்தை முன்னிட்டு, கவுதம் அதானி ரூ.10,000 கோடி மதிப்பிலான நிதியை நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பெரிய அளவிலான கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, அனைத்து தரப்பினரும் பெறக்கூடிய வகையில் தரமான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு இந்த நிதி முக்கியமாக பயன்படுத்தப்படும் என கௌதம் அதானி தனது தனது குடும்பத்தின் சார்பாக தெரிவித்துக்கொண்டார்.
மேலும், இந்த நிதியை பயன்படுத்தி தரமான கல்வி வாய்ப்புகளை வழங்கும் வகையில், தரமான K-12 பள்ளிகள் நிறுவப்படும். வேலைவாய்ப்பு உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் மேம்பாட்டு அகாடமிகள் நிறுவப்படும் என்றும் அதானி குடும்பத்தின் சார்ப்பில் ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா-வின் திருமணத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாகவே, ஜீத் அதானி மற்றும் திவா ஜெயின் ஷா ஆகியோர் சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, ஆண்டுக்கு 500 மாற்றுதிறனாளி பெண்களுக்கு திருமணத்திற்கு ரூ.10 லட்சம் வீதம் நிதி உதவி அளிப்பதாக அறிவித்தனர். ஜீத் அதானி தனது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு 21 புதுமண தம்பதிகளை சந்தித்து இந்த திட்டத்தை அறிவித்தார்.


Click it and Unblock the Notifications