இந்தியாவின் பெரும் பணக்காரர் மட்டும் அல்லாமல் விமான நிலையம் முதல் துறைமுகம் வரையில் பல துறைகளில் பெருமளவிலான ஆதிக்கம் செய்யும் அதானி குழுமத்தின் தலைவராக உள்ள கௌதம் அதானி-க்கு இன்று 61வது பிறந்த நாள்-ஐ கொண்டாடுகிறார்.
கௌதம் அதானி சமீபத்தில் Aap Ki Adalat என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார், அப்போது வர்த்தகம், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பேசினாலும் எப்போதும் இல்லாத வகையில் அதிகளவில் அவருடைய பர்சனல் வாழ்க்கையை குறித்து பேசினார்.

கௌதம் அதானி மாபெரும் தொழிலதிபர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நெருங்கிய நண்பர், 49.7 பில்லியன் டாலருக்கு சொந்தகாரர் போன்றைவை அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருடைய இளமை பருவம் எப்படி இருந்தது தெரியுமா..?
அதானி 24 ஜூன் 1962 அன்று ஒரு குஜராத்தி ஜெயின் குடும்பத்தில் பிறந்தார், இவருடைய தந்தை பெயர் சாந்திலால் அதானி, தாயின் பெயர் சாந்தபென் அதானி. கௌதம் அதானி உடன் சுமார் 7 பேர் உடன் பிறந்தவர்கள் உள்ளனர், இதில் வினோத் அதானி மட்டுமே அனைவருக்கும் தெரியும்.
கௌதம் அதானியின் தந்தை ஒரு சிறிய ஜவுளி வியாபாரி என்பதால் அகமதாபாத்தில் பிறந்து சில காலம் வளர்ந்தாலும் வர்த்தகம் காரணமாக அவரது பெற்றோர் குஜராத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தாராட் நகரத்திலிருந்து குடிபெயர்ந்தனர்.
கௌதம் அதானி தனது 15 வயதில் 10-ம் வகுப்பை முடித்த பின்பு, குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் வேலைக்குச் சேர வேண்டிய நிலை உருவானது. பள்ளிப்படிப்பை அகமதாபாத்தில் முடித்த கௌதம் அதானி கல்லூரிக்காக குஜராத் பல்கலைகழகத்தில் சேர்ந்து பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.
கௌதம் அதானி தனது 15 வயதில் குஜராத்-ஐ விட்டு வெளியேறி மிகவும் பிசியான மும்பையில் பணியில் சேர வேண்டிய நிலை உருவானதாக இந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அதானி 1978 ஆம் ஆண்டு மும்பைக்கு மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தில் வைரம் பிரிக்கும் பணியாளராக பணியாற்றினார்.
இதை தொடர்ந்து 1981 ஆம் ஆண்டில் கௌதம் அதானியின் மூத்த சகோதரர் மஹாசுக்பாய் அதானி அகமதாபாத்தில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையை வாங்கினார். இத்தொழிற்சாலையின் செயல்பாடுகளை நிர்வாகம் செய்ய கௌதம் அதானியை மும்பை வேலையை விட்டுவிட்டு குஜராத்துக்கு அழைத்தார்.
இந்த பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மூலம் PVC இறக்குமதி செய்தது மூலம் அனுபவம் பெற்ற கௌதம் அதானிக்கு இது சர்வதேச வர்த்தகத்திற்கு நுழைவாயிலாக அமைந்தது. அடுத்த 4 வருடத்தில் அதாவது 1985 ஆம் ஆண்டு சிறு தொழிற்சாலையாக primary polymers-ஐ இறக்குமதி செய்யும் வர்த்தகத்தை சொந்தமாக துவங்கினார்.
அதானி துவங்கிய முதல் நிறுவனத்தின் பெயர் அதானி எக்ஸ்போர்ட்ஸ், பின்னாளில் அது அதானி எண்டர்பிரைசர்ஸ் ஆக மாறி தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ள அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications