இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், நாட்டின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தனது இளைய மகன் ஜீத் அதானியின் திருமண தேதியை அறிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள கௌதம் அதானி வந்தபோது ஊடகங்களுடன் உரையாடினார். அப்போது ஜீத் அதானி வரும் பிப்ரவரி 7, 2025 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் பாரம்பரிய முறைப்படி திவா ஜெய்மின் ஷா-வை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர், ஜீத் அதானியின் திருமணம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு வந்திகள் பரவி வந்தன. இவர்களுடைய திருமணமும் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் போல மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் என பேசப்பட்டது.

இவர்களின் திருமணம் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஆடம்பர திருமணமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், கௌதம் அதானி இந்த வதந்திகள் அனைத்தையும் கும்பமேளா செய்தியாளர் சந்திப்பில் மறுத்துள்ளார். திருமணம் குடும்ப விழாவாக எளிமையாக நடைபெறவுள்ளதாகவும், குடும்பத்தினர் மற்றும் பாரம்பரிய முறைப்படி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகனிடம் திருமணம் எப்படி நடத்த வேண்டும் என கேட்டப்போது அவருக்கும் மிகவும் எளிமையான முறையில், ஒரு குடும்ப விழாவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக கௌதம் அதானி தெரிவித்தார்.
கௌதம் அதானி கும்பமேளா-விற்கு தனது மனைவி பிரீதி மற்றும் மகன் கரண், மருமகள் பரிதி ஆகியோருடன் பிரயாகராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் தரிசனம் செய்தார் கௌதம் அதானி. மகனின் திருமணத்திற்கு முன்பு இறைவனிடம் ஆசிர்வாதம் பெற வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜீத் அதானியின் திருமணம் குறித்து பரவலாக நிலவி வந்த ஊகங்களுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அதானியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பார்வையை இந்த அறிவிப்பு வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications