அதானி குரூப்-ன் வருடாந்திர கூட்டம் இன்று துவங்கிய நிலையில் இக்குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி அனைத்து பங்குதாரர்களிடம் பேசும்வகையில் யூடியூப் வாயிலாக பேசினார். ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை ஒரு திட்டமிட்ட சதி என கூறிய அவர், 2022-23 ஆம் நிதியாண்டில் அதானி குழுமத்தின் நிதி நிலையை வெளியிட்டார்.
2050க்குள் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 40 டிரில்லியன் டாலரை தாண்டும் என கௌதம் அதானி நம்புவதாக கூறிய நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் அதானி குரூப்-ன் மொத்த வருமானம் 85 சதவீதம் அதிகரித்து 2,62,499 கோடி ரூபாயாக உள்ளதாகவும், வரிக்கு பிந்தைய லாபமாக 23,509 கோடி ரூபாயை பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு தடுமாற துவங்கியது. புதன்கிழமை காலை அதானி குரூப்-ன் வருடாந்திர கூட்டம் துவங்கி கௌதம் அதானி பேச்சுக்கு பின்பு அதானி குழும பங்குகள் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்களின் ரியாக்ஷன் என்ன என்பதை கீழே பார்க்க முடியும்.
அதானி எண்டர்பிரைசஸ் - 0.35 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 0.03 சதவீதம் சரிவு
அதானி பவர் - 0.63 சதவீதம் உயர்வு
அதானி டிரான்ஸ்மிஷன் - 1.80 சதவீதம் உயர்வு
அதானி கிரீன் எனர்ஜி - 1.02 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 0.33 சதவீதம் சரிவு
அதானி வில்மார் - 1.09 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 1.10 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.08 சதவீதம் உயர்வு
NDTV - 0.52 சதவீதம் உயர்வு
கௌதம் அதானி தனது வீடியோவில் இந்த வருடம் NDTV வெளிநாட்டு ப்ரோகிராம் மற்றும் கவரேஜ்-ஐ துவங்க உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களை பெற உள்ளதாக AGM கூட்டத்தின் வீடியோவில் தெரிவித்தார்.
அதானி போர்ட் நிறுவனம் தான் உலகிலேயே அதிக லாபத்துடன் இயங்க கூடிய லாபகரமான நிறுவனமாக உள்ளது, EBITDA மார்ஜின் அளவு மட்டும் 70 சதவீதம். இஸ்ரேல் Haifa Port-ஐ கைப்பற்றியது மூலம் மத்திய தரைக்கடலின் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக கௌதம் அதானி தெரிவித்தார்.
அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மட்டும் அல்லாமல் 18 சதவீத வளர்ச்சி உடன் முதல் முறையாக 4000 கோடி ரூபாய் வருடாந்திர வருவாய் அளவீட்டை எட்டியுள்ளது. விரைவில் தனது ரினியூவபிள் எனர்ஜி வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய மும்பையில் 60 சதவீத மின்சாரத்தை ரினியூவபிள் எனர்ஜி வாயிலாக சப்ளை செய்ய உள்ளது.
அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் தற்போது 1,24,000 வீடுகளுக்கு சமையல் எரிவாயு சப்ளை செய்யப்படுகிறது. 2022-23 ஆம் நிதியாண்டில் மட்டும் அதானி டோட்டல் கேஸ் வருமானம் 46 சதவீதம் அதிகரித்து 4,683 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications